கடன் நெருக்கடியால் நாட்டை விட்டே ஓடிய கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 3வது முறையாகத் திருமணம் செய்யத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
62 வயதாகும் விஜய் மல்லையாவிற்கு 2 திருமணத்தின் மூலம் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள், இதுமட்டும் அல்லாமல் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து விசாரணை செய்யத் திட்டமிட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது கேள்பிரென்டை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
பிங்கி லால்வாணி
விஜய் மல்லையாவின் தற்போது தனது முன்னாள் 2 மனைவிகளை விடுத்து தனது நீண்ட நாள் கேள்பிரென்டான பிங்கி லால்வாணி உடன் வாழ்ந்து வருகிறார். இவர் தனது வாழ்வின் உயர், சரிவு என அனைத்துக் கடினமான இடத்திலும் பிங்கி இருக்கிறார், இதனால் இவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
2011 முதல்
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டுப் பிங்கி லால்வாணிக்கு விமானப் பணிப்பெண்ணாக (air hostess) வேலை அளித்தார். இதுதான் இருவருக்குமான முதல் சந்திப்பு.
நண்பர்கள்
இதன் பின்பு இருவருக்குமான நட்பு காதலாக மாறியது. இதன் காரணமாகக் கிங்பிஷர் நிறுவனத்தின் பல்வேறு நிகழ்ச்சியில் இருவரும் இடம்பெற்றனர். இக்காலகட்டத்தில் இருவரும் லின் இன் ரிலேஷன்ஷிப் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
முதல் மனைவி
விஜய் மல்லையாவின் முதல் மனைவி சமீரா தியாப்ஜி அவர்களுக்கும் விமானப் பணி பெண் தான். இதன் மூலம் விஜய் மல்லையாவிற்கு விமானப் பணி பெண்கள் மீது எப்போது ஒரு கண் இருந்தது தெளிவாகியது.
மனைவி மற்றும் குழந்தைகள்
விஜய் மல்லையாவிற்ரு 2 மனைவிகள் சமீரா தியாப்ஜி மல்லையா, ரேகா மல்லையா. இவர்கள் மூலம் மல்லையாவிற்குச் சித்தார்த் மல்லையா, லியான மல்லையா, தன்யா மல்லையா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது 3வது மனைவியாகப் பிங்கி லால்வாணியைத் திருமணம் செய்ய உள்ளார்
3வது ஆண்டு
சமீபத்தில் விஜய் மல்லையா மற்றும் பிங்கி லால்வாணி ஆகியோர் தங்களது 3வது ஆண்டு லின் இன் ரிலேஷன்ஷிப் வாழ்க்கையைக் கொண்டாடினர்.
9,000 கோடி ரூபாய்
கிங்பிஷர் நிறுவனத்தின் பெயரில் சுமார் 16 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் விஜய மல்லையா வாங்கிய கடனில் சுமார் 9,000 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கும் நிலையில் நாட்டை விட்டு ஒடி லண்டனில் தஞ்சம் அடைந்தார்.
சிபிஐயின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு லண்டன் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளார் விஜய் மல்லையா. இவருக்குத் தற்போது ஒரு வாரத்திற்கு 16 லட்சம் ரூபாய் செலவில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட ஓட விரட்டலாம்..!
ஜதின் மேத்தா
மோடிக்கு தோல்விதான்..
புது முயற்சி..!
காக்னிசென்ட் ஊழியர்கள்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications