நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதவி செய்துள்ளதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன ரகசிய உதவி..?
நுபவர்
2008ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத் புதிதாக ஒரு நிறுவனத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளார்.
இப்புதிய நிறுவனத்தில் சந்தா கோச்சார்-இன் கணவர் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களும் கூட்டு சேர்ந்தனர். இந்த நிறுவனத்தின் பெயர் நுபவர் ரினிவபல்.
பங்கீடு
நுபவர் ரினிவபல் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை வேணுகோபால் தூத்-உம், மீதமுள்ள 50 சதவீத பங்குகளைத் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களிடம் பிரிக்கப்பட்டது.
64 கோடி ரூபாய்
இந்நிலையில் 2010 மார்ச் மாதம் நுபவர் ரினிவபல் நிறுவனத்திற்குச் சுமார் 64 கோடி ரூபாய் அளவிலான கடன் வேணுகோபால் தூத் தலைமை வகிக்கும் சப்ரீம் எனர்ஜி நிறுவனத்திற்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதன் பின்பு சில மாதங்களில் வெறும் 9 லட்சம் ரூபாய்க்கு நிறுவனத்தின் மொத்த உரிமையும் வேணுகோபால் தூத், தீபக் கோச்சாருக்குக் கொடுத்துள்ளார்.
கடன்
ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் பெற்ற 6 மாதத்தில் வேணுகோபால், தீபக் மத்தியிலான உரிமை பரிமாற்றம் நடந்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
வேணுகோபால் தூத்
வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் இந்திய வங்கிகளில் இருந்து சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். மொத்த கடன் தொகையில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள கடன் தொகையில் நிலுவையில் இருப்பது வெறும் 10 சதவீதம் தான். அதாவது 2,000 கோடி ரூபாய்.
ஐசிஐசிஐ வங்கியில் வாங்கிய கடனில் 86 சதவீதம் இன்னும் வேணுகோபால் தூத் திருப்பிச் செலுத்தவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications