பஞ்சாப் நேஷனல் வங்கி வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோருக்குப் போலி ஆவணங்களை அடைப்படியாகக் கொண்டு சுமார் 13,000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்த அதிர்வுகள் இன்னும் தீராத நிலையில் தற்போது ஐடிபிஐ வங்கியும் இதேபோன்ற மோசடியைச் செய்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா
ஐடிபிஐ வங்கிகளின் ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநில வங்கி கிளைகளில் சுமார் 772 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் முறைகேடான வகையில் அளிக்கப்பட்டுள்ளதை ஐடிபிஐ உயர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீன் வளர்ப்பு வர்த்தகம்
2009-2013ஆம் ஆண்டுக் காலத்தில் இம்மாநில வங்கிகள் மீன் வளர்ப்பு வர்த்தகத்திற்காகப் போலி குத்தகை ஆவணங்களை வைத்து இல்லாத மீன் வளர்ப்புக் குளங்களுக்குக் கடன் அளித்துள்ளது.
குற்றம்
இந்தக் கடனுக்கான ஆவணங்களைச் சரியான முறையில் ஆய்வு செய்யாமல் கடன் வழங்கியதே இதற்கு முக்கியக் காரணம் என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
2 அதிகாரிகள்
இதற்கு 2 அதிகாரிகள் காரணம் எனவும் அதில் ஒருவரை பணிநீக்கம் செய்யதுள்ளதாகவும், மற்றொருவர் ஏற்கனவே ஓய்வுபெற்றுள்ளதாகவும் ஐடிபிஐ வங்கி உயர் மட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிபிஐ
இந்த 772 கோடி ரூபாய் மோசடி குறித்துச் சிபிஐ 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வையும், விசாரணையும் சிபிஐ அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications