அர்ஜுன் சோன்கார், கிஷன் சர்மா உட்பட 24 பேரை அசிங்கப்படுத்திய வருமான வரித்துறை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil
வருமான வரித்துறை 490 கோடி ரூபாய் அளவிலான வரியைச் செலுத்தாமல் மத்திய அரசை ஏமாற்றும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் அடங்கிய சுமார் 24 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த 24 பேரில் பலர் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை, இருப்பவர்களிடம் வரி நிலுவையைச் செலுத்த போதுமான சொத்துக்களும் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அசிங்கப்படுத்தும் முயற்சி

வரி செலுத்தாத நிறுவனங்கள், தனிநபர் ஆகியோரை அசிங்கப்படுத்தும் விதிமாக வருமான வரித்துறை இந்த 24 பேர் கொண்ட பட்டியலை பொது வெளியில் வெளியிட்டு உள்ளது.

வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் வரி நிலுவை வைத்துள்ளவர்களின் பெயர் பொதுவெளியில் வெளியிட்டு அவமானப்படுத்த இடம் உண்டு.

 

நிறுவனம்

தற்போது வெளியிடப்பட்டுள்ள நிறுன பட்டியலில் ஸ்டாக் குரு என்ற நிறுவனம் அதிகப்படியாகச் சுமார் 86.27 கோடி ரூபாய் அளவிலான வரி நிலுவையை வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான லோகேஷ்வர் தேவ் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

அர்ஜுன் சோன்கார்

அதேபோல் தனிநபர்களில் கொல்கத்தாவைத் தேர்ந்த அர்ஜுன் சோன்கார் என்பவர் 51.37 கோடி ரூபாய் வரி நிலுவையை வைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து கிஷன் சர்மா 47.52 கோடி ரூபாய் வரி நிலுவை வைத்துள்ளார்.

உடனடியாக

மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 24 பேரும் தங்களது வரி நிலுவையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையில் டைரெக்டர் ஜெனரல் கையெழுத்திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியத் துறை

தற்போது வெளியிடப்பட்ட 24 பேர் உணவு பதப்படுத்துதல், நாணய பரிமாற்றம், மென்பொருள், ரியல் எஸ்டேட், பிரீவரிஸ், நகை உற்பத்தி துறையைச் சேர்ந்தவர்கள்.

நகரம்

490 கோடி ரூபாய் வரி நிலுவை வைத்துள்ள 24 பேர் அதிகமானோர் அகமதாபாத், குவஹாத்தி, விஜயவாடா, நாசிக், சூரத், தில்லி, வதோதரா, கொல்கத்தா நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IT dept name and shame 24 people including Arjun Sonkar, Kishan Sharma

IT dept name and shame 24 people including Arjun Sonkar, Kishan Sharma
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns