மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளத்தினைத் தாமதமாக அளிக்கப்படும் என்று அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கு இது குறித்து நிறுவனத்தில் மட்டும் தகவல் பரிமாற்றம் செய்யக் கூடிய செயலி மூலமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையால் 2018 மார்ச் மாதத்திற்கான சம்பளம் தாமதாக அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஊழியர்கள்
விமான ஓட்டுனர், கேபின் குழுவினர் மற்றும் பிற இஞ்சினியர்களுக்கு 10-ம் தேதியும், அதே நேர அலுவலக ஊழியர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதியும் ஜேட் ஏர்வேஸ் பேரோலின் படி சம்பளம் அளிக்கப்படும்.
காரணம் தெரிவிக்க மறுப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினைத் தொடர்புகொண்ட போது இதற்கான காரணத்தினைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. ஆனால் ஊழியர்கள் பெற்றுள்ள கடன் தவனைப் போன்றவற்றால் சிக்கலில் உள்ளனர்.
செய்தி தொடர்பாளர்
நிறுவனத்திற்குள் ஏற்படும் விஷயங்கள் குறித்து வெளியில் தெரிவிக்க ஜெட் ஏர்வேஸ் விரும்பவில்லை என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜெட் ஏர்வேஸ்
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்து சேவை ஜெட் ஏர்வேஸ் அளித்து வருகிறது. இண்டிகோ நிறுவனத்தினை அடுத்து இரண்டாம் மிகப் பெரிய இந்திய விமானப் போக்குவரத்துச் சேவையினை வைத்துள்ள நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications