இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவை அளிக்கும் ஓலா தனது சக போட்டி நிறுவனமான உபர்-ஐ வாங்கத் திட்டமிட்டு வருகிறது.
வர்த்தகப் போட்டி மற்றும் குறைவான லாபம் காரணமாக ஆசிய சந்தையில் வர்த்தகத்தில் இந்தியாவைத் தவிரப் பிற அனைத்து நாடுகளில் இருந்தும் வெளியேறியுள்ளது உபர். இந்நிலையில் இந்திய வர்த்தகத்தை வாங்க ஓலா திட்டமிட்டு வருகிறது.
ஆதிக்கம்
தென் கிழக்கு ஆசிய சந்தையில் சிங்கப்பூர், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளின் சேவைகளைக் கிராப் நிறுவனத்திற்கு உபர் விற்பனை செய்துள்ளது.
இப்பகுதிகளில் கிராப் நிறுவனத்தின் ஆதிக்கம் மிகவும் அதிகம் என்பதால் உபரால் வர்த்தகத்தைப் பெற முடியவில்லை, இதனால் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
பங்கு விற்பனை
இந்த விற்பனையின் மூலமாகக் கிராப் நிறுவனத்தின் 27.5 சதவீத பங்குகளை உபர்-க்கு கிடைத்துள்ளது. இதனால் உபர் சிஇஓ தாரா கிராப் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களில் ஒருவராக இருக்கப்போகிறார்.
முதலீட்டாளர்
கிராப் மற்றும் உபர் நிறுவனங்கள் மத்தியிலான இந்தப் பங்கு விற்பனை எளிதாக முடிய முக்கியக் காரணம் இரு நிறுவனத்திலும் முதலீடு செய்திருந்த சாப்ட்பேங்க் தான்.
சாப்ட்பேங்க் வாயிலாகவே வர்த்தகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆசிய சந்தையில் மீதமுள்ள இந்தியா மட்டும் தான்.
இந்திய வர்த்தகம்
உபரின் இந்திய வர்த்தகத்திலும் சாப்ட்பேங்க் நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்துள்ள நிலையில், ஓலா இதனைப் பயன்படுத்தித் தனது ஆஸ்தான முதலீட்டாளரான சாப்ட்பேங்க் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆலோசனை நிறைவேற்றப்பட்டால் ஓலா நிறுவனம் உபரின் இந்திய வர்த்தகத்தை வாங்கும்.
ஓட்டுனர்கள் பிரச்சனை
இந்தியாவில் முக்கிய நகரங்களில் மட்டும் வர்த்தகம் செய்யும் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களை எதிர்த்து ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓலா தான் ராஜா..
ஓலா, உபரின் இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றினால் இந்திய ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் ஓலா தான் ராஜா.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications