அரசு பொது நல திட்டங்களில் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு..!

டெல்லி: மத்திய அரசு புதன்கிழமை பென்ஷன், ரேஷன் கார்டு, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு போன்ற பொது நல திட்டங்களுக்கு ஆதார் இணைப்பிற்கான காலக்கெடுவை ஆதார் சட்டம் 2016 பிரிவு 7-ன் கீழ் மூன்று மாதம் வரை காலக்கெடு நீட்டிப்புச் செய்வதாக அறிவித்துள்ளது.

மத்திய எலக்டிரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ குறிப்பாணையின் படி சமையல் எரிவாயு, கெரோசின், மாணவர்களுக்கான உதவித்தொகை போன்றவற்றுக்கான பயனாளிகளின் எண்ணிக்கை ஆதார் இணைப்புச் சட்டத்திற்குப் பிறகு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதார் - பாண்

அதார் - பாண்

மார்ச் 27-ம் தேதி வரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி 2018 மார்ச் 31 என்று இருந்த நிலையில் 2018 ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர். மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் வருமான வரித் துறை பான் கார்டுன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக டிவிட்டும் போட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ஆதார் எண்ணை வங்கி கணக்கு, மொபைல் எண் போன்றவற்றில் இணைப்பதற்கான காலக்கெடுவை அன்மையில் உச்ச நீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்ததன் பேரில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையமும் இந்த முடிவை எடுத்துள்ளது.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

எனினும் 12 இலக்க ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே வருமான வரியை தாக்கல் செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் புதியதாகப் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் ஆகும்.

 சட்டம்

சட்டம்

வருமான வரி சட்டப் பிரிவு 139 AA (2)-ன் கீழ் 2017-ம் ஆண்டு ஜூலை 1 வரை பான் கார்டு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இணைப்புகள்

இணைப்புகள்

மார்ச் 5-ம் தேதி வரையிலான தரவுகளின் படி 33 கோடி பான் கார்டு பயனர்களில் 16.55 கோடி நபர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள்.

முந்தைய கடைசித் தேதிகள்

முந்தைய கடைசித் தேதிகள்

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முன்பு 2017 ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31, மற்றும் 2018 மார்ச் 31 ஆகியவை கடைசித் தேதியாக இருந்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+