மிகப்பெரிய முதலீட்டு திட்டத்துடன் ஐஓசி.. 2030இல் வேற லெவல்..!
இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன், தனது சுத்திகரிப்பு அளவை இரட்டிப்பாக்க சுமார் 1.43 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் 2030ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு அளவு 150 மில்லியன் டன்னாக இருக்கும் என இந்தியன் ஆயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்தச் சில வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், சுத்திகரிப்பு அளவை உயர்த்தி எதிர்காலத் தேவையைப் பூர்த்திச் செய்ய வேண்டும் நோக்கத்துடன் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஐஓசி இந்தியாவில் இருக்கும் 23 சுத்திகரிப்பு ஆலையில் 11 ஆலைகளை இந்நிறுவனம் வைத்துள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்திற்குச் சுமார் 80.7 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது ஐஓசி.


Click it and Unblock the Notifications