இன்றைய மக்கள் வாழ்க்கையின் டிஜிட்டல் சேவைகள் ஒரு முக்கியப் பங்காகவே உள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சராசரியாக 4 ஜிபி இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துகின்றனர். இதில் பொழுதுபோக்கு முதல் ஷாப்பிங் வரையில் அனைத்து விதமான சேவைகளும் அடங்கும்.
புதிய வாடிக்கையாளர்கள்
புதிதாக ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்துவோர் இலவசமாக ஈமெயில் மற்றும் பிராந்திய மொழி சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். இண்டர்நெட் சேவையைப் பயன்படுத்திய சில வாரங்களில் ஈகாமர்ஸ் முதல் இண்டர்நெட் வங்கி சேவைகளைப் பயன்படுத்த துவங்குகின்றனர்.
வளர்ச்சி
இந்நிலையில் அடுத்த 5 முதல் 6 வருடத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 60 கோடியாக இருக்கும்.
ஜிடிபி
இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 1 டிரில்லியன் டாலர் அளவில் உயர்ந்திருக்கும், என்றும் இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 18-23 சதவீதமாகும்.
வளர்ச்சி
2016-17ஆம் நிதியாண்டில் இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 413 பில்லியன் டாலர், இது 2025ஆம் ஆண்டில் 1.15 டிரில்லியன் டாலர் அளவில் உயர்ந்திருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications