4 வருட உயர்வில் பெட்ரோல், டீசல் விலை.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளது.

தங்கம், வெள்ளி விலை நிலவரங்களைப் போலவே பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்ற மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ள படி, இன்று காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 4 வருட உயர்விற்குத் தள்ளியது எண்ணெய் நிறுவனங்கள்.

மக்கள் அதிர்ச்சி

இன்று எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின் மூலம் பெட்ரோல் 4 வருட உயர்வுக்கும், டீசல் வரலாறு காணாத அளவிற்கும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையின் உயர்வாக இன்று மாலை முதல் மக்களின் அன்றான தேவைகளான காய்கறி முதல் விமானப் பயண டிக்கெட் வரையில் விலை உயரும்.

 

விலை மாற்றம்

இன்று அறிவிக்கப்பட்ட விலை மாற்றத்தில் பிராண்டட் அல்லாத பெட்ரோல் விலை 10-11 பைசா வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் டீசல் விலை 11-12 பைசா வரையில் உயர்ந்துள்ளது.

சென்னை

சென்னையில் ஏப்.1ஆம் தேதி 1 லிட்டர் பெட்ரோல் 76.48 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், இன்று 11 பைசா உயர்ந்து 76,59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் டீசல் 12 பைசா உயர்ந்து 68.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

முக்கியக் காரணம்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு. இதைத் தாண்டி மத்திய, மாநில அரசு விதிக்கும் வரி பெரிய அளவிலான உயர்வை பெட்ரோல் மற்றும் டீசல் பெறுகிறது.

மேலும் இந்தியா தனது எரிபொருள் சேவையை அதிகளவில் இறக்குமதியின் வாயிலாகவே பெறுகிறது.

 

முக்கிய நாடுகள்

பல்வேறு காரணங்களுக்காகப் பெர்டோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC, ரஷ்யா மற்றும் இன்னும் சில நாடுகள் இணைந்து கச்சா எண்ணெய் விலையைச் செயற்கையாக உயர்த்த இதன் உற்பத்தியைக் குறைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

 

நீட்டிப்பு

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்த ஒப்பந்தம் 2018 உடன் முடிவடையும் நிலையில் OPEC அமைப்பு, ரஷ்யா உட்படச் சில நாடுகள் மத்தியிலான ஒப்பந்தத்தை மேலும் 10-20 வருடங்கள் வரையில் நீட்டிக்கச் சவுதி இளவரசர் முகமத் பின் சன்மான் தெரிவித்துள்ளார்.

9 முறை

2014 நவம்பர் முதல் ஜனவரி 2016 வரையிலாகக் காலத்தில் மோடி மத்திய அரசு சுமார் 9 முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்திய மக்கள் அதிகத் தொகை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவியது.

இது மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்ப்பைக் கிளப்பிய நிலையில் 2017 அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டது.

 

விலை நிலவரம்

தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

மத்திய அரசு

டீசல் வரலாறு காணாத விலை உயர்வையும், பெட்ரோல் 4 வருட உயர்வையும் அடைந்துள்ள நிலையில் மத்திய அரசு இதுவரை எவ்விதமான வரி குறைப்பும் அறிவிக்கவில்லை.

இதனால் மக்கள் கவலையில் உள்ளனர்.

 

கடமை..

வருமானத்திற்காக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது மத்திய அரசு தொடர்ந்து வரியை உயர்த்திய நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் விலை குறையும்போது வரியை குறைக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Diesel price At Record High, Petrol Price At 4 Year High

Diesel price At Record High, Petrol Price At 4 Year High
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns