வரி விதிக்கப்பட்ட பொருட்களின் முழுப் பட்டியலையும் வெளியிடும் அமெரிக்கா..!
சீனா அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் மூண்டுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும், சீனாக்கு எதிராக அமெரிக்காவும் வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு சீனா மீது வரி விதிக்கப்பட்ட பொருட்களின் முழுப்பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சீனாவை எச்சரிக்க விடுக்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகமாகியுள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி சுமார் 128 அமெரிக்கப் பொருட்கள் மீது சுமார் 25 சதவீத வரியைச் சீனா விதித்தது. இதன் எதிரொலியாகவே தற்போது அமெரிக்க இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும் அமெரிக்கா, சீனாவில் அறிவித்த வரி விதிப்புகள் மூலம் சுமார் 50-60 பில்லியன் டலார் அளவிலான வர்த்தகம் பாதிக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications