இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அங்காளி பங்காளாக இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும், வர்த்தகத்தை உயர்த்துவதிலும் குழாயடி சண்டை போட்டு வருவது நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், இரு நிறுவனம் ஓன்று சேர முடிவை எடுத்துள்ளது.
இதனால் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் போட்டியே இல்லாமல் அமேசான் ஆட்சி செய்யலாம். என்ன நடக்கிறது.
பிளிப்கார்ட்
இந்தியாவில் அமேசான் மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே பெரிய அளவிலான வாடிக்கையாளர் கூட்டத்தைச் சேர்த்தது, இதனால் வளர்ந்து நிற்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து சரிவைச் சந்தித்தது.
அதனைத் தடுக்கப் பளிப்கார்ட் அமேசானுக்குப் போட்டியாகப் பல்வேறு தள்ளுபடி விற்பனைகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் நடந்தது வேறு..
அமேசான்
பிளிப்கார்டுக்கு இடம் கொடுக்காமல் அதிகத் தள்ளுபடியுடன் அமேசான் விற்பனையைத் துவங்கியது, இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் தந்திரமாக யோசித்துச் சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்களைத் தொடர்ந்து கைப்பற்ற துவங்கின. இதன் வாயிலாக வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் வர்த்தக உயர்வும் பெற்றது.
தடுமாற்றமான நிலை
மின்திரா, ஜபாங் போன்ற முன்னணி நிறுவனங்களும், பிரிமாற்ற தளத்தில் போன்பே நிறுவனத்தையும், சர்வதேச சந்தை வர்த்தகத்திற்கு ஈபே இந்திய வர்த்தகத்திற்கும் எனப் பல முக்கிய நிறுவனங்களைக் கைப்பற்றியது.
இந்த நிலையிலும் அமேசானுடன் போட்டி போட பிளிப்கார்ட்-க்கு போதிய வலிமை கிடைக்கவில்லை.
புதிய முடிவு
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் அமேசானுக்கு நிகரான அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துடன் கூட்டணி சேர முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அதிரடியான டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
டிவிஸ்ட்
அமேசானுக்கு எதிராகப் பிளிப்கார்ட் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்த சுமார் 55 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த நிலையில்..
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளை வாங்க அமேசான் விருப்பத்தைத் தெரிவித்து அதற்கான விலையையும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் சமர்ப்பித்துக் கதையை முழுமையாக மாற்றியுள்ளது.
வால்மார்ட்
அமெரிக்காவில் ரீடைல் வர்த்தகத்தில் வால்மார்ட் ராஜா என்றே சொல்லலாம், ஆன்லைன் வர்த்தகத்திலும் கணிசமான அளவில் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.
ஆனால் இந்தியாவில் கதை வேறு, ரீடைல் வர்த்தகத்தில் சில முக்கிய நகர்களில் மட்டுமே வர்த்தகம் செய்து வரும் வால்மார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்க இந்த முதலீடு பெரிய அளவில் உதவும் என்பதாலையே பிளிப்கார்ட் நிறுவனப் பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டது.
போட்டி
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளைக் கைப்பற்றினால் இதன் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டே அமேசான் இந்தப் பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
வால்மார்ட் மட்டுமே பிளிப்கார்ட் பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்தில் இருந்த நிலையில், தற்போது அமேசானும் இறங்கியுள்ளதால் போட்டி அதிகரித்துள்ளது. இதனால் விலையும் அதிகரிக்கும்.
முதலீட்டாளர்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து மந்தமாக இருக்கும் நிலையிலும், தொடர் நஷ்டத்திலும் இருக்கும் காரணத்தால் அதன் ஆஸ்தான முதலீட்டாளர்களான டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், ஏசஸ் பார்ட்னர்ஸ், நேஸ்பர்ஸ், ஐடிஜி வென்சர்ஸ், மற்றும் சிலர் பிளிப்கார்ட் பங்குகளை விற்பனை செய்யத் தயாராக உள்ளனர்.
இதனாலேயே பிளிப்கார்ட்- வால்மார்ட் இடையிலான டீல் வெற்றிகரமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
மிகப்பெரிய முதலீடு
ஆகஸ்ட் 2017இல் ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு கிடைத்தது. இதின் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 14 பில்லியன் டாலராக உயர்ந்தது.
2007 முதல் பிளிப்கார்ட் சுமார் 6 பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியுள்ளது.
சிறந்த தேர்வு
இந்தியாவில் வால்மார்ட் இறங்கி சில வருடங்கள் ஆன நிலையிலும் பெரிய அளவிலான வளர்ச்சி அடையவில்லை, இந்நிலையில் பிளிப்கார்ட் அமேசான் நிறுவனத்துடன் இணைந்தால் இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
ஆனால்...
மக்கள் தான் பாவம்
இப்படி மொத்த ஆன்லைன் சந்தையும் அமேசான் கையில் கிடைக்கும் போது அவர்கள் வைப்பதே விலை, ஆகையால் மக்கள் தற்போது அளிக்கப்படும் விலையை விடவும் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதனால் சந்தையில் இருக்கும் கடைகள் இழந்த வர்த்தகத்தை மீண்டும் பெறும்.


Click it and Unblock the Notifications