பஜாஜ் ஆட்டோ அதிரடி.. இரண்டு சக்கர வாகனங்களின் விலையை ரூ.2000 வரை உயர்த்தியது..!

பஜார் ஆட்டோ இரண்டு சக்கர வாகன நிறுவனம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற நிலையில் வாகனங்களின் விலையை 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் உயர்த்தியுள்ளது.

அதிகபட்சமாக டாமினார் 400 வாகனத்தின் விலையை 2,000 ரூபாய் வரை ஏற்றியுள்ள நிலையில், டிஸ்கவர் மற்றும் பிளாட்டினா போன்ற சாதாரண வாகனங்களின் விலையினை 500 ரூபாய் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டாமினார்

டாமினார்

டாமினார் 400 வாகனத்தின் விலையை 2000 ரூபாய் வரை ஏற்றிய பிறகு டிஸ்க் வேரியண்ட் டாமினார் 1.44 லட்சம் ரூபாய் என்றும் ஏபிஸ் வசதி கொண்ட டாமினார் வாகனம் 1.58 லட்சம் ரூபாய் என்றும் டெல்லி எக்ஸ் ஷோரும் விலையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவெஞ்சர்

அவெஞ்சர்

இந்தியாவின் குறைந்த விலை க்ரூசர் மாடல் இரண்டு சக்கர வாகனமான அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் மற்றும் க்ரூசர் வாகனங்களின் விலை 1,000 ரூபாயும், அவெஞ்சர் 180 வாகனத்தின் விலை 1,100 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. எனவே தற்போது அவெஞ்சர் 180 ரூ.84,346 ரூபாயாகவும், அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸ் 94,464 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பஜாஜ் V15

பஜாஜ் V15

பஜாஜ் V15 வாகனம் 1,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு 65,178 ரூபாய் என்று விற்பனை செய்யும் நிலையில் V12 வாகனம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

டிஸ்கவர்

டிஸ்கவர்

புதிய ஸ்டாண்டர்டு டிஸ்கவர் வாகன விலை 500 ரூபாயும், டிஸ்க் பிரேக் வாகன விலை 1,000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

பிளாட்டினா

பிளாட்டினா

பிளாட்டினா கம்ஃபோர்டெக் வாகனம் 46,656 ரூபாயில் இருந்து உயர்ந்து 47,155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பல்சர்

பல்சர்

பல்சர் என்எஸ்200 வாகனம் 1,700 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 1.10 லட்சம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2018 புதிய பல்சர் 150 ரகப் பைக்கினை 78,234 ரூபாய்க்கு எக்ஸ் ஷோரூம் விலை எனப் பஜாஜ் நிறுவனம் விற்க முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+