இதுதான் முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்.. சிக்கியது யார் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி கடந்த 5 வருடத்தில் வருடத்தில் புதிதாகப் பல துறையில் இறங்கியுள்ளார். இப்படி இவர் இறங்கிய ரீடைல், டெலிகாம் என அனைத்திலும் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளார்.

 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக ஒரு வர்த்தகத்தில் இறங்கி ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கிக்கு ரகுராம் ராஜன் தலைமை வகித்த போது, இந்திய வங்கித்துறையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காகச் சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட்ஸ் வங்கிகளை அறிமுகம் செய்ய முடிவு செய்தார்.

இதன் படி இத்திட்டங்களில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்த ரகுராம் ராஜன், ஏராளமான வரவேற்பு கிடைத்தது. இதனை ஆய்வு செய்து சிறந்த விண்ணப்பங்களுக்கு உரிமை வழங்கினார்.

 

ஆகஸ்ட் 2015

ஆகஸ்ட் 2015

2015 ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் ஒன்று.

இந்நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 11 நிறுவனங்களுக்கு ரகுராம் ராஜன் தலைமையிலான ரிசர்வ் வங்கி பேமெண்ட்ஸ் வங்கி அமைக்க உரிமம் பெற்றது.

 

 துவக்கம்
 

துவக்கம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோவின் அறிமுகம் மற்றும் அதன் வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தை இதுநாள் வரையில் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டுச் சேவையாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுப் பேமெண்ட்ஸ் வங்கி தாமதம் செய்து அறிமுகம் செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் 3, 2018 முதல் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனம் இயங்க துவங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் இனி ஜியோ மியூசிக், ஜியோ சினிமா ஆகிய சேவைகளுடன் பேமெண்ட்ஸ் வங்கி சேவையையும் பெறலாம்.

 

முதல் முறையாக

முதல் முறையாக

இந்தியாவில் முதல் முறையாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்கியது ஏர்டெல் நிறுவனம் தான், இந்நிறுவனம் 2016 நவம்பர் மாதத்திலேயே தனது சேவையைத் துவங்கியது.

இதைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை 2017 மே மாதத்தில் துவங்கியது, 2017 ஜூன் மாதத்தில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி தனது சேவையைத் துவங்கியது.

 

ஆதித்யா பிர்லா

ஆதித்யா பிர்லா

ரிலையன்ஸ் பேமெண்ட்ஸ் வங்கியை துவங்கிய நிலையில் இந்நிறுவனத்தின் ஆஸ்தான போட்டி நிறுவனமான பிர்லா குழுமம் வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி தனது ஐடியா பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்க உள்ளது.

விஜய் சேகர் சர்மா

விஜய் சேகர் சர்மா

ஏற்கனவே பேடிஎம் நிறுவனத்தின் தலைவரான விஜய் சேகர் சர்மா, கூகிளின் தேஜ் பணப் பரிமாற்ற செயலி, வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள பணப் பரிமாற்ற சேவை ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் மூலம் இந்திய வர்த்தகர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் எனப் புலம்பும் நிலையில், தற்போது ஜியோவின் அறிமுகம் இவருக்குக் கண்டிப்பாக அதிர்ச்சியை அளிக்கும்.

ஏர்டெல்

ஏர்டெல்

ஏற்கனவே வாடிக்கையாளர்களின் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்திய நிலையில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் அறிமுகம் எர்டெலின் வர்த்தக வீழ்ச்சிக்கு ஆரம்பம் என்றே கூற முடிகிறது.

காரணம் டெலிகாம் சந்தையில் ஜியோவின் அறிமுகத்தின் மூலம் ஏர்டெலின் நிலை நாம் அனைவருக்கும் தெரியும்.

 

கூட்டணி

கூட்டணி

முகேஷ் அம்பானியின் இந்த ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற பேமெண்ட்ஸ் வங்கிகளைக் காட்டிலும் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் மீது கூடுதல் நம்பிக்கை உருவாகும்.

பங்கீடு

பங்கீடு

இந்த ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் 70 சதவீத பங்குகளை முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் 30 சதவீத பங்குகளை எஸ்பிஐ வங்கியும் வைத்துள்ளது. இந்தக் கூட்டணி குறித்து ரிலையன்ஸ் 2017 வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

ஏர்டெல், பேடிஎம், பினோ, ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து ஆதித்யா பிர்லா, தபால் துறைஷ டெக் மஹிந்திரா, வோடபோன் ஆகிய நிறுவனங்களும் பேமெண்ட்ஸ் வங்கி துவங்குவதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளது.

தபால் துறை

தபால் துறை

பேமெண்ட்ஸ் வங்கி சேவைகளைத் தற்போது சோதனை திட்டமாக இந்திய தபால் துறை அளித்து வருகிறது. இது முழுமையான வடிவத்தைப் பெறும் போது நட்டின் மிகப்பெரிய பேமெண்ட்ஸ் வங்கியாகத் திகழும்.

 20 பிஸ்னஸ் ஐடியா..!

20 பிஸ்னஸ் ஐடியா..!

<strong>மாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..!</strong>மாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..!

 

 

ஐடி ஊழியர்கள் பரிதவிப்பு

ஐடி ஊழியர்கள் பரிதவிப்பு

<strong>இந்தியர்களை கட்டம்கட்டும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்.. ஐடி ஊழியர்கள் பரிதவிப்பு</strong>இந்தியர்களை கட்டம்கட்டும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்.. ஐடி ஊழியர்கள் பரிதவிப்பு

 

 

சூப்பரான ஐடியா..!

சூப்பரான ஐடியா..!

<strong>கணவனுக்கு போட்டியாக பெண்கள் வீட்டிலிருந்தபடி 1,000 முதல் லட்சம் வரை சம்பாதிக்கச் சூப்பரான ஐடியா..!</strong>கணவனுக்கு போட்டியாக பெண்கள் வீட்டிலிருந்தபடி 1,000 முதல் லட்சம் வரை சம்பாதிக்கச் சூப்பரான ஐடியா..!

 

 

ரூ.2,000 கோடி அபேஸ்..!

ரூ.2,000 கோடி அபேஸ்..!

இன்போசிஸ் ஊழியர் செய்த மிகப்பெரிய மோசடி.. ரூ.2,000 கோடி அபேஸ்..!இன்போசிஸ் ஊழியர் செய்த மிகப்பெரிய மோசடி.. ரூ.2,000 கோடி அபேஸ்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio Payments Bank begins its operations

Jio Payments Bank begins its operations | முகேஷ் அம்பானியில் புதிய பிஸ்னஸ் துவங்கியது.. சோகத்தில் ஏர்டெல், பேடிஎம்..! | இதுதான் முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்.. சிக்கியது யார் தெரியுமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X