யூடியூப்-இல் கொடூரம்.. துப்பாக்கியால் சுட்டு பெண் தற்கொலை.. இதுதான் காரணமா..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஒரு பெண் மூன்று நபர்களைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் குறிப்பிட்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர்பிச்சை 'இந்த மோசமான சம்பவத்தினைப் பற்றி விளக்க வார்த்தையே வரவில்லை, சூசன் மற்றும் நானும் ஊழியர்களுக்கு அதாரவாகச் செயல்பட்டு வருகிறோம். காவல் துறைக்கும் இந்த சம்பவத்தில் இருந்து பாதுகாப்பாகப் பிறரை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இரங்கல்

அது மட்டும் இல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்திய நாதெல்லா உள்ளிட்டோரும் தங்களது இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தத் துப்பாக்கி சுடு ஏன் என்ற காரணங்கள் இது வரை தெரியவில்லை. ஆனால் இது தீவிரவாத நடவடிக்கைக்காக அல்ல என்பது மட்டும் உறுதி என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சுடு

மூன்று நபர்களைச் சுட்ட பிறகு இறந்த அந்தப் பெண்ணின் பெயர் நாசிம் அகதாம், வயது 38 என்பதும், 9 எம் எம் கைத்துப்பாக்கியை பயன்படுத்திச் சுட்டுள்ளார் என்ற விவரங்கள் மட்டும் தெரியவந்துள்ளது. இந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள பல நிறுவனங்களில் அதிகப்படியான இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நாசிம் அகாதம்

நாசிம் அகாதம் தன்னுடைய பிளாக் பக்கத்தில் உன்மைக்கு இந்த உலகில் மதிப்பில்லை என்றும் யூடியூப் அல்லது பிற வீடியோ இணையதளங்களில் சமமான வளர்ச்சி வாய்ப்பு இல்லை என்றும் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டுள்ளார். ஒருவேலை இதற்கும் துப்பாக்கிச்சூட்டிற்கும் சமந்தம் இருக்குமே என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

ஆப்பிள்

ஒரு வருடத்திற்கு முன்பு இதே போன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் அலுவலகத்தில் துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி டெக் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இறக்க முக்கியக் காரணங்களாக இருப்பது அதிக வேலை பழுவால் ஏற்படும் மன அழுத்தமே ஆகும்.

மன அழுத்தம்

ஒவ்வொரு மனிதனுக்கு இடைவிடாத பணியின் காரணங்களாலும் மற்றும் பல காரணங்களாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வரும் காட்சியைக் கண்டு வருகிறோம். மன அழுத்தம் என்பதுதான் ஒரு மனிதனின் நோய்க்கு முதல் அறிகுறி. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் நிம்மதியில்லாமல் அழுத்தமாக இருந்தால் சந்தோஷமாக வாழ முடியாது. மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது. மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்க்க வேண்டும் அல்லது போக்க வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போம்.

தூக்கமில்லாமல் தவிக்கின்றீர்களா?

மன அழுத்தத்திற்கு முதல் காரணமாக இருப்பது தூக்கமின்மை மற்றும் தீயகனவுகள்தான். நீங்கள் உங்கள் பணிகளைத் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் செய்தீர்கள் என்றால் மன அழுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் விரும்பாத, பிடிக்காத பணிகளைச் செய்து வந்தால் உங்களை மன அழுத்தம் தானாகவே தொற்றிக் கொள்ளும். அது உங்கள் மனதிற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் தீங்கானது. எனவே நீங்கள் பார்க்கும் பணி, நீங்கள் விரும்பிப் பார்க்கும்படியாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.

ஆண்டாசிட் மாத்திரைகள்: (Antacid tablets)

நீங்கள் நல்ல பணியில் இருந்து கைநிறையைச் சம்பாதித்தாலும், உங்களுக்கு ஏற்படும் சிறுசிறு மன அழுத்தத்தைப் போக்க ஆண்டாசிட் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தால் உங்களுக்கு ஆபத்துதான். நெஞ்சு எரிச்சல் மற்றும் குமட்டல் காரணமாக நீங்கள் ஆண்டாசிட் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஒரு கட்டத்தில் அது உங்களை மன அழுத்தம் உடையவராக மாற்றிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு வயிற்றுக்கோளாறு உள்படப் பிரச்சனைகள் இருந்தால் நீங்களே டாக்டராக மாறி ஆண்டாசிட் மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்த்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம்.

தொடர்ச்சியான தலைவலியா?

மன அழுத்தம் தோன்றுவதற்கு இன்னுமொரு முக்கியக் காரணம் விட்டுவிட்டு வரும் தலைவலி அல்லது தொடர் தலைவலி. ஹெல்த்லைன்.காம் என்ற இணையதளத்தில் பிரபல எழுத்தாளர் கிம்பர்லி ஹாலந்து என்பவர் கூறியபோது, மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வீட்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படும் தலைவலி உங்களை ஒரு கட்டத்தில் மன அழுத்தம் பாதிக்கப்பட்டவராக மாற்றிவிடும். எனவே தலைவலிக்கு உரிய சிகிச்சை எடுத்து கொள்வதோடு, வீட்டிலும் அலுவலகத்திலும் முடிந்த வரை சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பற்களை நறநற எனக் கடிக்கும் ஆசாமியா நீங்கள்?

கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்கும் போதோ, அல்லது ஏதாவது அலுவலக மீட்டிங் நடக்கும்போது ஏதாவது காரணத்திற்காகப் பற்களை நறநற எனக் கடிக்கும் ஆசாமியா நீங்கள், அப்படியானால் உங்களை மன அழுத்தம் என்ற நோய் மிக அருகில் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்துக் கூறும்போது பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஒருவருக்கு அதிகரிக்கும்போது அவர் தானாகவே தனது பற்களைக் கடித்துக் கொள்கிறார் என்று கூறுகின்றனர். மேலும் பற்களைக் கடிப்பது உங்கள் பற்களுக்கும் கெடுதல் ஏற்படுவது மட்டுமின்றித் தாடை வலியையும் ஏற்படுத்தும். எனவே பற்களைக் கடிக்கும் பழக்கத்தைத் துரத்திவிடுங்கள்.

ஞாபகம் மறதிக்காரரா நீங்கள்?

மன அழுத்தம் ஏற்படுத்துவதற்கு இன்னுமொரு முக்கியக் காரணமாக ஞாபக மறதியை கூறுவதுண்டு. இதைப் பிரபல எழுத்தாளர் ஹெய்டி மிட்சல் உறுதி செய்துள்ளார். அடக்க முடியாத மன அழுத்தத்திற்கு மிக முக்கியக் காரணமாக மெமரி லாஸ் மற்றும் அதைச் சார்ந்த காரணங்கள் இருப்பதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

இனமறியாத பயம் பயம்

மனிதனுக்கு ஒரு மிகப்பெரிய எதிரி. மனதின் வலிமையைக் குறைத்து மன அழுத்தத்தை ஏற்படுவதில் பயம் ஒரு முக்கியப் பங்கு உண்டு. மேலதிகாரிக்குப் பயம், ஆசிரியர்களிடம் பயம், பொதுமக்களிடம் பயம் என எங்கும் பயம் எதிலும் பயம் எனத் தெனாலி' கமல் போல் இருந்தால் உங்களை மன அழுத்தம் மிக விரைவாக பற்றிக் கொள்ளும். இந்தப் பயத்தின் காரணமாக மன அழுத்தம் மட்டுமின்றி விரைவான இதயத் துடிப்பு, வியர்த்தல், நடுங்குதல், குமட்டல், குளிர், மற்றும் மார்பு வலி ஆகியவையும் ஏற்படவும் காரணமாக அமைகின்றது.

கோபத்தின் வெளிப்பாடு

நீங்கள் ஒரு சிறந்த வேலையில் இருக்கின்றீர்கள். மேலும் அமைதியான, மகிழ்ச்சியான மனிதராக இருக்கின்றீர்கள். அதே நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்துபவராக இருந்தால் நீங்கள் சரியான வழியில் செல்கிறீகள் என்று அர்த்தம். கோபம் வரும் இடத்தில் கோபத்தை வெளிப்படுத்தினால் வேலையும் சிறப்பாக நடக்கும். உங்கள் அழுத்தமும் கோபத்தை வெளிப்படுத்தியவுடன் குறைந்துவிடும். மனதிற்குள்ளேயே கோபத்தைப் பூட்டி பூட்டி வைத்தால் அது ஒருநாள் பயங்கரமாக வெடித்து உங்கள் மன அழுத்தம் அதிகமாகிவிடக் காரணமாகிவிடும். அதே நேரத்தில் தேவையில்லாமல் கோபப்படாதீர்கள். அதுவும் கெடுதல்தான்.

ஞாயிறு இரவு உங்களுக்கு எப்படி இருக்கும்?

வெள்ளிக்கிழமை மாலை முதல் வார இறுதி நாட்களைச் சந்தோஷமாகக் கொண்டாடும் நீங்கள் ஞாயிறு இரவு வந்தவுடன் திங்கட்கிழமை செய்யக்கூடிய வேலையை நினைத்து நீங்கள் அச்சப்பட்டால் உங்களை மன அழுத்தம் துரத்தி வருகின்றது என்று அர்த்தம். அதே நேரத்தில் திங்கள் காலையை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தால் நீங்கள் பார்க்கும் வேலையை நீங்கள் மனதார விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். எனவே நீங்கள் எந்த மாதிரியான மனிதர் என்பதை ஞாயிறு இரவு வெகு எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

மன அழுத்தமா? பணிச்சுமையைக் கையாளும் வழிகள்

 

செயல்திட்டத்தை வரையுங்கள்

பல பணிகள் குவியும்போது அதைச் செய்யத் திட்டமிடாமல் பலர் செயலில் குதித்துவிடுகிறார்கள்.'பணிச்சுமையைக் கையாள உங்கள் தினசரி வேலைகளைத் திட்டமிடல் அவசியம்' என ஒஸ்வல் மோதிலால் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர் சுதிர் தர் குறிப்பிடுகிறார்.

நேர அவகாசத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகள், முக்கிய மேலதிகாரிகளின் பணிகள், உங்கள் உறுதுணை தேவைப்படும் பணிகள் மற்றும் நீங்களே செய்துகொள்ளக் கூடிய பணிகள் எனப்பிரித்துக் கையாளுங்கள் என அவர் கூறுகிறார்.

 

பணிச்சுமையைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்

செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் முடிவில்லாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதில் மற்றவர்கள் பங்களிப்புத் தேவைப்படும் பணிகளை இனம் காணுதல் அவசியம்.

ஒரு வேலையை யாருடன் சேர்ந்து சுமுகமாகச் செய்யமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார் திருத் தர்.வொர்க் பெட்டர் டிரெய்னிங் நிறுவனர் தலைவர் ஸ்வப்நில் காமத் கூறுகையில் 'எல்லாரும் எல்லாவற்றையும் செய்து விட இயலாது என்பது நாமறிந்ததே.

முக்கியத்துவம் குறைவான அல்லது அவசரமற்ற வேலைகளை அதனை நன்றாகச் செய்யக் கூடிய பிறரிடமும் ஒப்படைக்கலாமல்லவா?

 

சீர் செய்து கொள்ளுங்கள்

வேலைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளவும் சீராக இயங்கவும் பல வழிகள் இன்று உள்ளன. முக்கியத்துவம் வாரியாக வேலையை வரிசைப்படுத்துதல், நினைவூட்டுதல் மற்றும் மற்றொவர்ரோடு இணைந்து செய்தல் ஆகியவை சில.

"பலர் இன்றும் கூட எளிய வழிமுறைகளான நாட்காட்டிக் குறிப்புகள், செய்யவேண்டிய வேலைகளின் பட்டியல், படிவங்கள், ஆய்வுகள், குழுக்கள், மாதிரிப் படிவங்கள், நூலகங்கள், வழிகாட்டிகள் மற்றும் கலப்புச் செயலிகள் (sharing applications ) போன்றவற்றைப் பயன்படுத்துவதே இல்லை.

ஒருவர் இதில் தேவையானவற்றை ஆராய்ந்து சிறப்பானதை பின்பற்றுவது அவசியம்" என்கிறார் சிஎல் ஹெச் ஆர் சர்விசஸ் நிறுவன அதிகாரி ஆதித்ய நாராயண் மிஸ்ரா.

 

திறம்படச் செயல்படுங்கள்

கடின உழைப்பிற்கு மாற்று இல்லாத பொழுது திறமை கை கொடுக்கும்.

"சில பணிகளுக்கு உங்கள் கவனமும் அறிவுக் கூர்மையும் தேவைப்படும் அதே வேளையில் சிறிது முன்பு செய்த வேலைகளைப் போலவே இருக்கும். இது போன்ற வேலைகளை அறிந்து உங்கள் நேரத்தை முக்கிய வேலைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு மதிப்பை உருவாக்க முடிவதோடு உங்கள் குறிக்கோளையும் அடைய இயலும்" என்கிறார் தர்.

 

ஒய்வு மற்றும் இடைவேளை அவசியம்

வேளைகளில் மூழ்கிப் போவது ஒரு நமக்கு இயற்கையான விஷயம். "ஒருவர் கடின உணர்வுகளையும் நினைவுகளையும் விடுத்து சற்று இளைப்பாற வேண்டியது அவசியம்" என்று மிஸ்ரா கூறுகிறார்.

சிலர் பணியிடத்தை விட்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்து விட்டு வரவும் அல்லது சிறு தூக்கமோ அல்லது ஒரு நல்ல இரவு தூக்கமோ எடுப்பது, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது அல்லது உங்களை இளைப்பாறச் செய்யும் ஏதாவது ஒன்றையோ செய்யலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

 

மன அழுத்தம் கொண்ட வேலைகள்

இந்தியாவில் அதிக மன அழுத்தம் கொண்ட வேலை இதுதான்..!

டென்ஷன் இல்லா வேலை

இந்த வேலையில் டென்ஷனே கிடையாதாம், ஆனாலும் அதிகச் சம்பளம்..!

வொர்க் லைப் பேலென்ஸ்

நம் வாழ்க்கையில் வொர்க் லைப் பேலென்ஸ் கொண்டு வருவது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

YouTube Shooting: Woman goes on rampage at company's headquarters. How to Reduce Stress?

YouTube Shooting: Woman goes on rampage at company's headquarters. How to Reduce Stress?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns