5,62,000 இந்திய மக்களின் தகவலை விற்பனை செய்த பேஸ்புக்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் மார்க்..!

உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமாக இருக்கும் பேஸ்புக் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வேண்டும் எனப் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை முறைகேடாக வகையில் பகிரப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியான நாள் முதல் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு எதிர்ப்புகளையும், சரிவுகளையும் சந்தித்தது.

இதுமட்டும் அல்லாமல் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா இந்தியாவிலும் சில அரசியல் கட்சிகளுக்கு உதவி செய்துள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் உலகில் எவ்வளவு மக்களின் தகவல்களைக் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்குப் பகிரப்பட்டுள்ளது எனப் பட்டியல்போட்டுள்ளது. இதில் இந்தியர்களின் நிலையை நீங்களே பாருங்கள்.

 தகவல் திருட்டு

தகவல் திருட்டு

இந்தத் தகவல் திருட்டில் பேஸ்புக் நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு உள்ளார்களா என்பது விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ள என்பதைப் பேஸ்புக் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

 

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

வருகிற திங்கட்கிழமை முதல் பேஸ்புக்கின் நியூஸ் பீட் பக்கத்தில் மக்கள் அனைவருக்கும் தங்களது தகவல்களைப் பாதுகாக்கும் விதிமாகத் தங்களின் தகவல்களைப் பகிரப்பட்டுள்ள செயலிகளைக் காட்டப்படும். இதில் மக்களுக்கு விருப்பம் இல்லையெனில் செயலி முழுமையாகவும் நீக்கப்படும்.

இதன் ஒருபகுதியாகக் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்குப் பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளதா என்பதையும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் எனப் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

 

8.7 கோடி பேர்

8.7 கோடி பேர்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்குப் பகிரப்பட்ட தரவுகளை ஆய்வு செய்யப்பட்டதை ஆய்வு செய்த போது சுமார் 8.7 கோடி பேஸ்புக் கணக்குகளின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாகப் பேஸ்புக் நிர்வாகம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இதன் ஆய்வின் முடிவுகளில் இந்த எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது பேஸ்புக்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது..?

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது..?

8.7 கோடி பேரில் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா தான், அமெரிக்காவில் இருந்து சுமார் 70,632,350 மக்களின் கணக்குகள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்குப் பகிரப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 1,175,870 பேர், இந்தோனேசியா 1,096,666 பேர், யுனைடெட் கிங்டம் 1,079,031 பேர், மெக்சிகோ 789,880, கனடா 6,22,161 பேர், இந்தியாவில் 5,62,455 பேர், பிரேசில் 4,43,117 பேர், வியட்நாம் 4,27,446 பேர், ஆஸ்திரேலியா 3,11,127 பேரின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.

 

எப்படித் திருடப்பட்டது..?

எப்படித் திருடப்பட்டது..?

இதுமட்டும் அல்லாமல் பேஸ்புக் செயலியில் இருந்து எப்படி எல்லாம் தகவல்களைத் திருட முடியும், எப்படித் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது என்பதை இன்று பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முழு அறிக்கை

பேஸ்புக் அறிக்கையில், பேஸ்புக் செயலியின் மூலம் தகவல்களை எப்படி எல்லாம் திருட முடியும் என்பதை விளக்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+