அமெரிக்காவை தூக்கி சாப்பிட இந்தியாவிற்கு 5 வருடம் போதும்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

அமெரிக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு 70களில் அந்நாட்டில் விதைக்கப்பட்ட உற்பத்தித் துறைக்கான முக்கியத்துவம் ஒரு காரணமாக இருந்தாலும், வல்லரசு நாடு என்னும் நிலைக்கு உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் சிலிக்கான் வேலி என்றால் மிகையாகாது.

இன்றளவும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய அளவிலான பங்காற்றுவது சிலிக்கான் வேலி தான், ஏன் நியூயார்க் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதும் சிலிக்கான் வேலி நிறுவனங்கள் என்றாலும் மறுக்க முடியாது.

இந்தியாவில்..

அமெரிக்காவில் வெற்றிகரமாக இயங்கும் பல நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது, ஏன் இந்தியாவில் சிலிக்கான் வேலி என்ற ஒன்று இல்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கும், நிலையில் இதற்குப் பல பதில்களும் உள்ளது.

இந்தியாவில் சிலிக்கான் வேலியை உருவாக்க எவ்வளவு நாள் ஆகும் என்றும், அதன் முக்கியத்துவத்தையும் கமல் அகமத் விளக்கியுள்ளார்.

 

நடுத்தரக் குடும்பங்கள்

இந்தியாவில் சிலிக்கான் வேலி உருவாக்குவதற்கான திறன் ஏக்கசக்கமாக உள்ளது, ஆனால் இன்னோவேன் தளத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது கட்டாயமாகியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்திய நடுத்தரக் குடும்பங்களுக்கு இத்தளம் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும் நிலையில் innovation ecosystem தளத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அமெரிக்காவை விடவும் சக்திவாய்ந்த சிலிக்கான் வேலியை உருவாக்க முடியும் என உலக வங்கியின் இந்திய கிளையின் தலைவர் ஜூனைத் கமல் அகமத் தெரிவித்துள்ளார்.

 

வருமானம்

இந்தியா innovation ecosystem தளத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் நாடுகள் அளவில் குறைந்த வருமானம் பெறும் நாடுகள் நிலையில் இருந்து அதிக வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் சேர மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

5 வருடம் தான்

மேலும் அவர், உலக நாடுகள் தற்போது தொடர்ந்து பெரிய அளவிலான மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா சிலிக்கான் வேலியை அடுத்த 5 வருடத்தில் உருவாக்க முடியும்.

வளரும் நாடுகள்

வல்லரசு நாடுகளுடன் போட்டி போட திட்டமிடும் வளரும் நாடுகளுக்கும் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்றால் இன்னோவேஷன் தளத்தை விரிவாக்குவது தான்.

வருமானம்

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) பிரிவில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆரம்பக் காலத்தில் அதிக லாபம் கிடைத்தாலும், அதற்கான சிறந்த வர்த்தக வாய்ப்புகள் கிடைக்காத போது இப்பிரிவில் கிடைக்கும் வருமானம் குறைகிறது. இந்த வர்த்தக வாய்ப்புகள் தடைப்படப் பல்வேறு காரணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்புகள்

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என அனைத்து நாடுகளும் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வேலைவாய்ப்பைக் குறைத்து வரும் நிலையில், இந்தியாவிற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி ஊழியர்கள் பரிதவிப்பு

இந்தியர்களை கட்டம்கட்டும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்.. ஐடி ஊழியர்கள் பரிதவிப்பு

முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ் துவங்கியது..

முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ் துவங்கியது.. சோகத்தில் ஏர்டெல், பேடிஎம்..!

அமெரிக்கா நிறுவனத்திற்கு ஷாக்..!

அங்காளி பங்காளிகள் ஓன்று சேர திட்டம்.. அமெரிக்கா நிறுவனத்திற்கு ஷாக்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India can do a Silicon Valley in 5 years

India can do a Silicon Valley in 5 years
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns