பிட்காயின் மற்றும் இதர டிஜிட்டல் கரன்சி மீதான முதலீட்டில் இந்திய மக்களுக்கு அதிகளவிலான ஆர்வம் இருந்தது, ஆனால் சமீப காலமாகப் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் குறைந்த காரணத்தினால் இதன் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இந்திய மக்களிடம் இருந்த இந்த ஆர்வத்தை உணர்ந்த முன்னாள் இன்போசிஸ் ஊழியர் அமித் பர்த்வாஜ் போலி பிட்காயின் முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாகச் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளார்.
கைது
கெயின்பிட்காயின் என்னும் நிறுவனத்தின் தலைவர் தான் அமித் பரத்வாஜ், இந்திய முதலீட்டார்களைக் கவரும் வகையில் போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சுமார் 300 மில்லியன் டாலர் அளவில் மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது அமித் பரத்வாஜ் தாஸ்லாந்து, பாங்காங்-இல் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்எல்எம்
இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான எம்எம்எம் மோசடி முறையைப் பயன்படுத்தி மக்களை ஈர்க்கும் வகையில் சிறப்பான பிட்காயின் மீதான முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து மக்களை மாற்றியுள்ளார் அமித் பரத்வாஜ்.
2013
அமித் பரத்வாஜ் 2013ஆம் ஆண்டுக் கிளவுட் தொழில்நுட்பத்தில் பிட்காயின் வர்த்தகம் செய்யவும், உருவாக்கும் சேவையைக் கெயின்பிட்காயின் நிறுவனத்தின் வழங்கினார். இதன் வாயிலாகவே இந்த மோசடியும் நடத்தியுள்ளார் அமித்.
இன்போசிஸ்
கெயின்பிட்காயின் நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்ற அமித் பரத்வாஜ் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications