பொதுத் துறை வங்கி நிறுவனமான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.10 சதவீதம் முதல் 0.80 சதவீதம் வரை உயர்த்தி உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1 கோடி ரூபாய் வரை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நட்கள் முதல் 5 வருடங்கள் வரை முதலீடு செய்தால் 4.5 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை லாபம் பெற முடியும்.
மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.50 சதவீத வட்டி விகித லாபத்தினைப் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளிக்கிறது.
வரிச் சேமிப்பு அளிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6.8 சதவீத லாபத்தினை ஐஓபி அளிக்கிறது. அதே நேரம் என்ஆர்ஈ டெபாசிட் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
ஐஓபி வங்கி நாடு முழுவதும் 3,342 வங்கி கிளைகளுடனும், 3,278 ஏடிஎம் மையங்களுடன் இயங்கி வருகிறது. வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 3,68,128 கோடியாகும். அதில் ரூ. 2,16,592 கோடி டெபாசிட்டாக உள்ள தொகை ஆகும்.


Click it and Unblock the Notifications