2018-2019 நிதி ஆண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தினைக் குறைக்கவில்லை என்றும் 6.0 சதவீதமாகவே தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

2017-2018 நிதி ஆண்டில் 6.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி 2018-2019 நிதி ஆண்டில் 7.4 சதவீதம் உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்பிற்குப் பிறகு அரசு பத்திரங்களின் லாபம் சரிந்துள்ளது. 10 வருட பத்திரங்களின் வருவாய் 0.7 சதவீதம் சரிந்து 7.22 சதவீதமாக உள்ளது.
ரெப்போ விகித அறிவிப்பிற்குப் பிறகு இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 519.57 புள்ளிகள் என 1.58 சதவீதம் உயர்ந்து 33,539.19 புள்ளிகள் எனவும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 170.50 புள்ளிகள் என 1.68 சதவீதம் உயர்ந்து 10,289.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications