ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரம்ஜான் சலுகையாக வெளிநாட்டு வழித்தடங்களில் விமானப் பயணம் செய்ய அடிப்படை கட்டணத்தில் 30 சதவீதம் வரை சலுகை அளிப்பதாக jetairways.com இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ரம்ஜான் சிறப்புச் சலுகையில் ஜெட் ஏர்வேஸ் டிக்கெட்களை 2018 ஏப்ரல் 19 வரை புக் செய்து 2018 மே 15 முதல் 2018 ஜூன் 15 வரை பயணம் செய்யலாம். இந்தச் சலுகை விலை டிக்கெட் ஒரு வழி பாதைக்கு மட்டுமே ஆகும்.
எக்கானமி டிக்கெட் சலுகை
அபுதாபி, பஹ்ரைன், டமாம், டோஹா, துபாய், ஜெட்டா, குவைத், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய வழித்தடங்களில் எக்கானமி வகுப்பு டிக்கெட்களுக்கு 30 சதவீத சலுகை அளிக்கப்படும்.
பிரீமியம் டிக்கெட் சலுகை
அதே நேரம் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்யப் பிரீமியம் டிக்கெட்களுக்கு 30 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
சலுகை விதிகள்
குழந்தை / சிறுவர்களுக்கான தள்ளுபடி, தேதி மாற்றம், விமான மாற்றம், பணத்தைத் திருப்பிச் செலுத்தும் கட்டணம், வார இறுதி கட்டணம், கருப்புக் காலம், பயணக் கட்டுப்பாடு, விமானக் கட்டுப்பாடு ஆகியவை விழாக்காலச் சலுகை விதிகள் பொருந்தும்.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு விதிகளில் புதியதாக ஒன்றைச் சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது சலுகையைத் திரும்பப் பெற்று அதற்கு இணையான சலுகைகளை அளிக்க உரிமை உண்டு.


Click it and Unblock the Notifications