ஆன்மீகம் மற்றும் யோகா கலையை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இருந்த பாபா ராம்தேவ், தனக்கு இருக்கும் மக்கள் ஆதரவை வர்த்தக முறையில் பயன்படுத்த திட்டமிட்டு பதஞ்சலி நிறுவனத்தைத் துவங்கினார். இந்த நிறுவனத்தின் வாயிலாகச் சோப்பு முதல் நெய் வரை நுகர்வோர் சந்தையில் இருக்கும் பல பொருட்களைத் தயாரித்து வர்த்தகப்படுத்தி மிகப்பெரிய வெற்றி அடைந்தார்.
இந்த வெற்றியில் பல முன்னணி நுகர்வோர் நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் பாபா ராம்தேவ் புதிதாக ஒரு வர்த்தக முடிவை எடுத்துள்ளார், இந்த முடிவால் எத்தனை நிறுவனங்கள் பாதிக்கப்படப் போகிறது..?
அடுத்தத் திட்டம்
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் துணை நிறுவனரான பாபா ராம்தேவ், அடுத்த வருடம் புதிய வர்த்தகத் துறையாக ஆடை விற்பனை இறங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜூன்ஸ்
மக்கள் என்னிடம் பல முறை பதஞ்சலி எப்போது ஜீன்ஸ் விற்பனை செய்யப்போகிறது எனக் கேட்கிறார்கள், இதனால் 2019ஆம் ஆண்டில் பதஞ்சலி மூலம் ஆடைகளையும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதில் பாரம்பரிய ஆடைகள், குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்கான ஆடைகளும் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும் எனப் பாபா ராம்தேவ் கோவா பெஸ்ட் 2018 நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
ஆடைகள்
நுகர்வோர் சந்தையில் இருந்த பதஞ்சலி நுகர்வோர் சந்தையில் இருந்து மாறுபட்டு ஆழகு சாதன பொருட்கள், உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ள நிலையில் இந்த ஆடை விற்பனை திட்டத்தின் மூலம் பதஞ்சலி நிறுவனம் விளையாட்டு மற்றும் யோகாவிற்கான ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
சுவதேசி
இத்திட்டத்தின் ஆரம்பக்கால முடிவுகளில் பதஞ்சலி சுவதேசி ஆடைகளை விற்பனை செய்யும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சவால் விடும் 'மலையாளி'


Click it and Unblock the Notifications