2015-ம் ஆண்டுப் பிரதமர் மோடி அறிமுகம் செய்த பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டங்களின் இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையினை உயர்த்த நிறுவனங்கள் வைத்துள்ள கோரிக்கையினை மத்திய அரசு ஏற்க மருத்துள்ளது.
இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் ஏழை மக்களுக்குக் குறைந்த பிரீமியம் தொகையில் அதிகப் பயன் அளிக்கும் படி மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு 12 ரூபாய் செலுத்தி 2 லட்சம் காப்பீடு அளிக்கும் பாலிசியைப் பெறலாம். இந்தப் பாலிசிதாரர்கள் இறக்க நேர்ந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்துகள் போன்ற காரணங்களால் இரண்டு கை, கால், கண் போன்ற உடல் உறுப்புகள் போன்றவை முழுமையாகச் சேதம் அடைந்து சரி செய்ய முடியாமல் போனால் 2 லட்சம் ரூபாயும், ஒரு கண், கை, கால் போன்றவை சேதம் அடைந்தால் 1 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு பெற முடியும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயதிற்குள் உள்ளவர்கள் ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக்கொண்டு 2 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டை பெறலாம்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
இந்திய பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பிரீமியமாகப் பெறப்பட்ட தொகையை விட அதிகமாகக் காப்பீடு தொகையாகப் பெறப்படுவதால் இரண்டு திட்டங்களின் பிரீமியம் தொகையையும் ஏற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இந்தப் பாலிசி விகிதமானது 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும்.
வசூலிக்கப்பட்ட பிரீமியமும் திருப்பி அளிக்கப்பட்ட காப்பீடும்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 1,756 கோடி ரூபாய் பிரீமியம் தொகை வசூலிக்கப்பட்டு 1,931 கோடி ரூபாய் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 161 கோடி ரூபாய் பிரீமியம் தொகையாக வசூலிக்கப்பட்டு 300 கோடி ரூபாய் காப்பீடு தொகை அளிப்பது என 100 சதவீதம் வரை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
நியூ இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் மட்டும் 75 சதவீத பாலிசிகள் உள்ளது. மீதம் மட்டும் தனியார் நிறுவனங்கள் வழங்கி வழங்கியுள்ளன
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications