இந்தியாவின் 4-ம் மிகப் பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான எச்சிஎஸ் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தினை 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வங்கியுள்ளது மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. இந்த நிறுவனத்தினை வாங்கியதன் மூலம் எச்சிஎல் நிறுவனத்திற்கு லைப் சையின்ஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவையில் தங்களது ஆதிக்கத்தினை மேலும் விரிவுபடுத்தும் படியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாகச் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனம் தங்களது இணையதளத்திலும் குறிப்பிட்டு உறுதி செய்துள்ளது..
எச்சிஎல் அமெரிக்கா
எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் அதன் துணை நிறுவனமான எச்சிஎல் அமெரிக்காவின் கீழ் டெலிரக்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதாகத் தெரிவித்துள்ளது.
லைப் சையின்ஸ்
எசிஎல் நிறுவனம் சி3ஐ நிறுவனத்தினைக் கையகப்படுத்தியதை அடுத்து தங்களது ஐடி மற்றும் பிஸ்னஸ் சேவைகளுடன் லைப் சையிஸ் மற்றும் சிபிஜி வெர்டிக்கல்ஸ் உடன் மேலும் சிறப்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்.
சி3ஐ சொல்யூஷன்ஸ்
சி3ஐ நிறுவனம் மருத்துவமனை, மருந்தகம், மற்றும் மருந்து விற்பனை ஆதரவு சேவைகளில் நிலையானது என்பதால் எச்சிஎல் நிறுவனத்தின் லைப் சையின்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவை வழங்க முடியும்.
சி3ஐ நிறுவன வருவாய்
சி3ஐ நிறுவனம் 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் 199 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயினை ஈட்டி இருந்தது. அமெரிக்கா, இந்தியா,வங்க தேசம், சீனா, இங்கிலாந்து, ஜப்பான் என இந்த நிறுவனத்தில் 3,700-க்கும் அதிகமான நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications