புதிய வருமானவரி தாக்கல் படிவங்களை பற்றிய 7 முக்கிய தகவல்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் (Central Board of Direct Taxes- CBDT) 2018-19 மதிப்பீடு ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் படிவங்களைப் பற்றிய அறிவிப்பாணையை (அறிவிப்பு எண்:16/2018) ஏப்ரல் 3 அன்று வெளியிட்டுள்ளது. புதிய படிவத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம்.

Sahaj படிவம்

எளிமையாக்கப்பட்ட ஒரு பக்க வருமானவரி தாக்கல் படிவம்-1(Sahaj) ஐ, 50லட்சம் வரை வருமானம் பெறும் மற்றும் அந்த வருமானத்தைச் சம்பளம், வீட்டுவாடகை அல்லது பிறவகையில் (வட்டி,..) வருமானமான பெறும் இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு தனிநபரும் பூர்த்திச் செய்யலாம்.

வீட்டுவாடகை வருமானம்

புதிய வருமானவரி தாக்கல் படிவத்தில், சம்பளம் மற்றும் வீடு போன்ற பகுதிகள் நன்கு வகைப்படுத்தப்பட்டு, சம்பளத்தின் அடிப்படைத் தகவல்கள் (படிவம்16 ல் உள்ளபடி) மற்றும் வீட்டுவாடகை மூலம் வரும் வருமானத்தைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

படிவம்-2

வருமானவரி தாக்கல் படிவம்-2 வகைப்படுத்தப்பட்டு, தொழில் அல்லது வேலையின் மூலம் வருமானம் பெறாத தனிநபர் அல்லது கூட்டுக்குடும்பம் (Hindu Undivided Family) இப்படிவத்தைத் தாக்கல் செய்ய வழிவகுக்கிறது.

படிவம் 3

தொழில் அல்லது வேலையின் மூலம் வருமானம் பெறும் தனிநபர் அல்லது கூட்டுக்குடும்பம் (Hindu Undivided Family), படிவம் 3 அல்லது படிவம் 4ஐ(வருமானத்தைப் பொறுத்து) தாக்கல் செய்யலாம்.

வெளிநாட்டு வங்கி கணக்கு

இந்தியாவில் வசிப்பவராக இல்லாவிடின், பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஏதேனும் ஒரு வெளிநாட்டு வங்கி கணக்குத் தகவல்களை வழங்க வேண்டும்.

குறிப்பிடக்கூடாது

மதிப்பீடு ஆண்டு 2017-18ன் வருமானவரி தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள, அந்தக் காலத்தில் செய்யப்பட்ட பண முதலீடுகள் பற்றிய தகவல்களை, 2018-19 மதிப்பீடு ஆண்டில் குறிப்பிடக்கூடாது.

பூர்த்திச் செய்யும் முறை

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, படிவத்தைப் பூர்த்திச் செய்யும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வருமானவரி தாக்கல் படிவங்களும் மின்னணு முறையில் பூர்த்திச் செய்யப்படுகின்றன. எனினும், படிவம்1 (Sahaj) மற்றும் படிவம்4 (Sugam) பயன்பட்டாலும், பின்வரும் நபர்கள் காகித படிவங்களைப் பயன்படுத்தியும் வருமானவரி தாக்கல் செய்யலாம்.

(i) கடந்த வருடத்தில் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள்
(ii) 5 லட்சத்திற்குக் குறைவான வருமானம் உடையத் தனிநபர்/கூட்டுக்குடும்பம் அல்லது வருமானவரி தாக்கலில் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்காதவர்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

7 things to know about new ITR Forms for AY2018-19

7 things to know about new ITR Forms for AY201819 - Tamil Goodreturns | புதிய வருமானவரி தாக்கல் படிவங்களை பற்றிய 7 முக்கிய தகவல்கள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns