சாமானியர்கள் அனைவருக்கும் பில்லியனர்கள் அதாவது பணக்கார்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு, இப்படி உலகின் டாப் 100 பில்லியனர்கள் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்தத் துறையில் முதலீடு செய்தால் சீக்கிரம் பில்லியனர் ஆக முடியும் என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
100 பில்லியனர்கள்
உலகின் முன்னணி 100 பில்லியனர்களை மையப்படுத்தி ஆய்வு செய்ததில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.
மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள்
மில்லியன் என்றால் 10 லட்சம், மில்லியனர் என்பால் 10 லட்சம் டாலர் அளவிலான சொத்துக்களை வைத்துள்ளவர்கள், இதேபோல் பில்லியனர் என்றால் 100 கோடி டாலர் வைத்துள்ளவர்கள்.
20 வருடத்தில் வேகமான வளர்ச்சி
உலகில் மொத்தம் 1.52 கோடி மில்லியனர்கள் இருக்கும் நிலையில் பில்லியனர்கள் எண்ணிக்கை வெறும் 2,124 மட்டுமே.
1987இல் வெறும் 140ஆக மட்டுமே இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை 1997ஆண்டு வரையில் 224ஆக மட்டுமே உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த 20 வருடத்தில் இதன் எண்ணிக்கை சுமார் 2,124 ஆக உயர்ந்துள்ளது.
வயது
உலகின் முன்னணி 100 பில்லியனர்கள், முதல் மில்லியன் டாலரை சேர்த்தபோது அவர்களின் சாரசரி வயது வெறும் 37 மட்டுமே, அதேபோல் மில்லியனர் தரத்தில் இருந்து பில்லியனர்கள் தரத்திற்கு உயர்ந்த போது அவர்களின் சாரசரி வயது 51.
காலம்
அதேபோல் மில்லியனர் நிலையில் இருந்து பில்லியனர் தரத்திற்கு உயர சராசரியாக வெறும் 14 வருடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் தெரிந்த வந்துள்ளது.
துறை
கடந்த 20 வருடத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்த துறை மற்றும் அதிகளவிலான பில்லியனர்களை உருவாக்கிய துறை எது என்பதைப் பார்க்கும் போது டெக் துறையில் பெரிய அளவிலான வளர்ச்சி தெரிகிறது.
டெக் துறையில் வெறும் 7.3 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படுகிறது என்பது மட்டும் அல்லாமல் இத்துறை மீதான முதலீடு மூலம் பெரிய அளவிலான லாபத்தைப் பெறலாம் என்பதும் தெரிகிறது.
பிற துறைகள்
இதேபோல் பிற துறையின் நிலை என்ன என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஆட்டோமோடிவ் - 11 வருடம்
கட்டுமானம் மற்றும் என்ஜினியரிங் - 27 வருடம்
எனர்ஜி - 12.5 வருடம்
பேஷன் மற்றும் ரீடைல் - 14 வருடம்
பைனான்ஸ் மற்றும் முதலீடு - 23 வருடம்
உணவு மற்றும் பானங்கள் - 19 வருடம்
சூது மற்றும் கசினோ - 43 வருடம்
லாஜிஸ்டிக்ஸ் - 18 வருடம்
உற்பத்தி - 16.5 வருடம்
மீடியா - 16.5 வருடம்
மெட்டல் மற்றும் மைனிங் - 12 வருடம்
ரியல் எஸ்டேட் - 19.5 வருடம்
டெக் - 7.3 வருடம்
டெலிகாம் - 16.5 வருடம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications