உங்கள் பணத்தை நீங்கள் சேமிக்கிறீர்களே செலவு செய்கிறீர்களோ, வங்கிகள் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி உங்களிடம் எவ்வளவு பணத்தைக் கறக்க முடியுமோ அவ்வளவையும் கறந்து விடும்.
வங்கிகளின் தந்திரங்களை அறிந்து கொண்டால் பல்வேறு சிக்கலில் இருந்து நீங்கள் எளிதாகத் தப்பித்துக்கொள்ளலாம்.
விளம்பரப்படுத்தும் வட்டிவிகிதம் எப்போதும் கிடைக்காது
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், கடன் வழங்குவோர் தாங்கள் விளம்பரப்படுத்திய வட்டிவிகிதத்திலேயே தரவேண்டிய அவசியம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சதவீதத்தினருக்கும் மட்டும் அறிவித்த வட்டிவிகித்தில் கடன் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு அதிகமான விகிதத்தில் தருவர்.
நீங்கள் செலுத்தும் பணத்திற்கு வங்கிகணக்கு மதிப்பானதா?
சில வங்கிகள், தாங்கள் பிடித்தம் செய்யும் மாதாந்திர கட்டணத்திற்கு ஈடாக இலவச பயணக் காப்பீடு போன்ற சலுகைகளை வழங்கும். இந்தச் சலுகைகளை முழுமையாக நீங்கள் பயன்படுத்தும் வரை, நீங்கள் செலுத்தும் பணத்திற்கு உங்கள் வங்கிகணக்கு மதிப்பே இல்லை.
நீங்கள் அட்டையைத் தேய்த்தால் அவர்களுக்குப் பணம்
உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் செலவழிக்கும் போது, விற்பனையாளர்களிடம் இருந்து அந்தப் பணபரிமாற்றத்தை செய்யக் கட்டணம் வசூலிக்கப்படும். அதில் பெரும் பகுதி வங்கிகளுக்கே செல்லும். என்னதான் நீங்கள் உங்கள் பணத்தைச் செலவழித்தாலும், வங்கிகளும் அதனால் பலனடையும்.
கடனே வாங்காதது நல்லதல்ல
வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்க விரும்பினால், உங்களின் அனைத்து பணபரிமாற்ற வரலாற்றையும் பரிசோதிப்பர். நீங்கள் கடன்/ கிரெடிட் அட்டையைப் பயன்படுத்தவில்லை என்றால், உங்களின் திருப்பிச் செலுத்தும் திறன் அவர்களுக்குத் தெரியாது. எனவே கடனே வாங்காதது நல்லதல்ல.
பணபரிமாற்றத்தின் வரிசையை மாற்றுதல்
நீங்கள் ஒரு நாளில் பொருட்கள் வாங்கி, செய்யும் பணபரிமாற்றத்தின் வரிசையை அதிகத் தொகையில் இருந்து சிறிய தொகை வரை வரிசைப்படுத்துவர். இதன் மூலம், முதல் சில பரிமாற்றங்களிலேயே பணம்எடுக்கும் எல்லையை (Over draft) கடந்து விட்டால் பிறவற்றுக்குக் கட்டணம் செலுத்த நேரிடும். இதன் மூலம் வங்கிகளுக்கு அதிகத் தொகை கிடைக்கும்.
கடைசியில் பணம் செலுத்துதல்
அதே நாளில் அதிகப் பணம் எடுக்க நேரிடும் என்பதால், முன்கூடியே வங்கியில் பணத்தைச் செலுத்துவீர்கள். ஆனால் முதலில் பணம் எடுக்கும் விண்ணப்பத்தைச் செயல்படுத்தி, பணம் எடுக்கும் எல்லையைக் கடந்து விட்டதாகக் கூறி கட்டணம் வசூலித்த பின்னர் உங்கள் பணம் செலுத்தும் விண்ணப்பத்தை ஏற்பார்கள்.
காசோலையைத் தாமதப்படுத்துதல்
உங்கள் வங்கிகணக்கில் செலுத்திய காசோலைக்கான பணத்தை, வங்கிகள் பல்வேறு காரணங்களைக் கூறி கணக்கில் வரவு வைக்கத் தாமதப்படுத்துவார்கள். அதன் மூலம் பணம் எடுப்பதற்கான எல்லையைக் கடந்ததற்கான கட்டணத்தை வசூலிப்பர்.
தேவையில்லா காப்பீடுகள்
கிரெடிட் அட்டை போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது, பணபரிமாற்றத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உதவும் காப்பீட்டு திட்டங்களையும் உங்கள் தலையில் கட்ட வங்கிகள் முயற்சிக்கும். எப்படியும் அந்தக் காப்பீடு திட்டங்கள் ஒரு போதும் உதவப்போவதில்லை.
அதிகசெலவு வைக்கும் முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் கடன்கள்
அடமானமோ, கடனோ முன்கூட்டியே செலுத்தினால் நல்லது என நினைப்பீர்கள். ஆனால், பல நிதி நிறுவனங்கள் அதற்கு அதிகக் கட்டணங்களை வசூலித்து அதிர்ச்சி வைத்தியம் அளிப்பர்.
செயல்படாத கிரெடிட் அட்டை கணக்கை மூடுவது நல்லதல்ல
கடனுக்கு விண்ணப்பிற்கும் போது, ஏற்கெனவே பெற்ற கடனை திருப்பிசெலுத்தும் தன்மையை (con utilization) பரிசோதிப்பர். உங்களுக்கு வழங்கப்பட்ட கடனில் எவ்வளவு தவிர்த்திருக்கிறீர்கள் என்பது கண்டறியப்படும். அது அதிகமாக இருந்தால், உங்களை நம்பிக்கையற்றவர் எனக் கருதுவர். எனவே, பழைய கிரெடிட் அட்டை கணக்கை மூடுவது இதை உறுதிப்படுத்தி, கடன் பெறும் வாய்ப்பைக் குறைக்கும்.
வட்டி விகிதம் அதிகமாகவில்லை என்றாலும், அடமானத்திற்கான தவணைத்தொகை அதிகரிக்கும்
அடமானத்துடன் சேர்ந்த பல்வேறு குறியீடுகள், மத்திய வங்கியின் வட்டிவிகித்துடன் சம்பந்தப்பட்டது இல்லை. எனவே அடிப்படை விகிதம் அதிகரிக்காமலேயே, உங்களின் வட்டியை நிதிநிறுவனங்கள் அதிகப்படுத்தும்.
அடமானத்திற்கு அதிகக் கட்டணம்
வட்டிவிகிதத்தைப் பற்றிக் கவலைப்படாமல், உங்கள் அடமானத்திற்கு நிர்வாகக் கட்டணம் முதல் வெளியேறும் கட்டணம் வரை அனைத்தையும் வாங்குவார்கள். எனவே விண்ணப்பத்தில் சிறிதாக அச்சிடப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்.
இலவச வங்கிச்சேவை என்பதே கிடையாது
உங்கள் வங்கி கணக்கிற்கு மாதாந்திர கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்றாலும், அது இலவச கணக்கு இல்லை. பணம் எடுக்கும் எல்லையைக் கடந்த கட்டணம் அல்லது வட்டி செலுத்த தவறியதற்கான அபராதம் போன்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ பணம் செலுத்திக் கொண்டுதான் உள்ளோம்.
உங்கள் சோம்போறிதனத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வங்கிகள்
சிறந்த சலுகைகள் எப்போதும் புதிய வாடிக்கையாளர்களுக்குத் தான். வெவ்வேறு கணக்குகளில் மாறி மாறி பொருட்கள் வாங்கும் உங்களின் அக்கறையின்மையைப் பயன்படுத்தி, வங்களில் சிறந்த சலுகைகள் கிடைக்காமல் செய்துவிடுகின்றன.
பழைய கடன்கள் அதிக மதிப்பு தரும்
எவ்வளவு அதிகக் கடன் பெற்றிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான், உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை வங்கிகள் தெரிந்துகொள்ளும். எனவே, பழைய கிரெடிட் கணக்கை மூடுவது நல்ல முடிவல்ல.
பணமே பணத்தைச் செலவழிக்கும்
பிறவங்கிகளின் பணம் எடுக்கும் இயந்திரங்களை (ATM) பயன்படுத்தினால், அதற்கும் கட்டணம் செலுத்த நேரிடும்.
வெளிநாடுகளில் வங்கி அட்டையைப் பயன்படுத்துதல்
பல வங்கிகள் நீங்கள் வெளிநாடுகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தினால், அனைத்து வித கட்டணங்களை விதிக்கின்றன. எனவே முன்னதாகவே அதை அந்நாட்டுப் பணமாக மாற்றிக்கொள்வது நல்லது.
சேமிப்பு வட்டிவிகிதம் நிலையானது அல்ல
ஆரம்பத்தில் அதிக வட்டிவிகிதம் கொடுப்பது போல ஏமாற்றி விட்டு, பின்னர்க் கடுமையாக விகிதத்தைக் குறைத்துவிடுவர். எனவே, கடைசியில் என்ன லாபம் கிடைக்கும் எனத் தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.
விடுமுறைக்கான பணத்தை வங்கியில் மாற்றக்கூடாது
உங்கள் விடுமுறை காலத்தில், வெளிநாடுகளில் செலவிடும் பணத்திற்கு மிக மோசமான பரிமாற்ற விகிதத்தை வங்கிகள் தருகின்றன. அதற்குப் பதிலாகப் பணம் மாற்றும் நிறுவனங்களை அணுகலாம்.
தவறுகளை எதிர்பார்க்கும் வங்கிகள்
வட்டியில்லாக் கடன் அட்டைகள் வழங்கும் அளவிற்கு வங்கிகள் ஒன்றும் தங்கமான மனம் படைத்தவை அல்ல. எப்படியும் தவணைகளைச் செலுத்தும் போது ஏதேனும் தவறு செய்தால் அந்தச் சலுகையைப் பறித்து அதிக அபராதம் பெற்று விடலாம் என்று தான். தப்பித்தவறி சூழ்ச்சிவலையில் வீழ்ந்து விடாதீர்கள்.
நாங்க பொறுப்பல்ல..!
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications