நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாக விளங்கும் ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்திற்குக் கொடுத்த 3,250 கோடி ரூபாய் கடனில் சந்தா கோச்சார் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிபிஐ விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சந்தா கோச்சாரின் சீஇஓ பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ நிர்வாகம்
2 வாரத்திற்கு முன்பு வரை சந்தா கோச்சார் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என ஐசிஐசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ள நிலை, தற்போது நிர்வாகக் குழு இரண்டாகப் பிரிந்து சிஇஓ பதவியில் இருந்தது அவரை இறக்க வேண்டும் என ஆலோசனை நடத்தி வருகிறது.
மார்ச் 31, 2019
இந்தியாவின் 2வது பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் அடுத்த 2 வாரத்தில் இதற்காகன முடிவையு் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்தா கோச்சாரின் சிஇஓ பதவி காலம் வருகிற மார்ச் 31,2019 உடன் முடிவடைகிறது.
நிர்வாகக் குழு
ஐசிஐசிஐ நிர்வாகக் குழுவில் 12 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் 6 பேர் தனிப்பட்ட நிர்வாகத் தலைவர்கள். இதில் எல்ஐசி நிறுவன தலைவரும் ஒருவர், ஐசிஐசிஐ வங்கியின் 9.4 சதவீத பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.
சிபிஐ
சிபிஐ அதிகாரிகள் வீடியோகான் நிறுவன தலைவர் மற்றும் சந்தா கோச்சார்-இன் கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் மீது முதற்கட்ட விசாரணையைத் துவங்கியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 0.43 சதவீதம் வரையில் சரிந்து 279.40 ரூபாய்க்குச் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications