நீங்கள் டெக் ஊழியரா? ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் சம்பளம் வேண்டுமா? அப்படியானால் உடனே ஜப்பானிற்கு விமான டிக்கெட் புக் செய்யுங்கள்.
இந்திய டெக் ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம் போன்றவற்றில் சிக்கு தவித்து வரும் நிலையில் ஜப்பான் ஐடி ஊழியர்கள் மற்றும் கணிப்பொறியாளர்களை அசரடிக்கும் சம்பளம் அளித்து வரவேற்றுக்கொண்டு இருக்கிறது.
ஸ்டார்ட் டுடே
ஜப்பான் இ-காமர்ஸ் நிறுவனமான ஜூஜூடவுன் அதன் தாய் நிறுவனமான ஸ்டார்ட் டுடேவில் 7 டெக் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாகவும் 9,44,000 ரூபாய் ஆண்டுச் சம்பளம் என்று விளம்பரம் அளித்துள்ளது.
மேலும் ஸ்டார்ட் டுடே நிறுவனம் புதியதாக ஒரு நிறுவனத்தினைத் துவங்க உள்ளதாகவும் அதற்குச் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்ப அறிவுடன் தனித்துவமான திறன் படைத்தவர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தப் பணியிடங்கள் அனைத்தையும் 2018 மார்ச் 18-ம் தேதிக்குள் நிரப்ப முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பான வேலை வாய்ப்பு
ஜப்பானில் பாதுகாப்பான வேலை வாய்ப்பிற்காகக் குறைந்த அளவில் சம்பளம் அளிக்கப்படும் வேலை வாய்ப்புகளை மக்கள் விரும்பும் நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஐடி ஊழியர்களுக்குக் கோடி கணக்கில் சம்பளம் அளிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு
சென்ற மார்ச் மாதம் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு இந்தியாவில் இருந்து 2 லட்சம் ஐடி ஊழியர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாகவும் தேவைப்பட்டால் க்ரீன் கார்டும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த முடிவானது ஜப்பானில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் ஊழியர்கள் தட்டுப்பாட்டினை குறைக்கவே என்றும் தெரிவித்துள்ளனர்.
விசா
2018 ஜனவரி மாதம் ஜப்பான் அரசு இந்தியர்கள் எளிதாக விசா பெறும் முறையினையும் அறிமுகம் செய்துள்ளது. இதனால் சுற்றுலா மற்றும் வணிகம் பெருகும் என்றும் தெரிவித்துள்ளனர்,
நிரந்தரக் குடியுரிமை
புதிய விதிகளின் கீழ் ஜப்பானில் 5 வருடம் இருந்தால் தான் நிரந்த குடியுரிமை என்பதில் விலக்கு அளித்து ஒரு வருடம் இருந்தால் மட்டும் போதும் என்றும் குறைத்துள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications