கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள பினானி சிமெண்ட் நிறுவனத்தை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் வாங்கத் திட்டமிட்டு இதற்கான பணிகளை அதன் தாய் நிறுவனத்திடம் முடித்துள்ளது.
ஆனால் இந்த இணைப்பிற்குப் பிரச்சனையாக இருக்கிறது டால்மியா பாரத்.
பினானி சிமெண்ட்
பினானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பினானி சிமெண்ட் அதீத கடன் நெருக்கடியால் சிக்கியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் மீது திவால் மற்றும் நொடித்து நடவடிக்கைகள் (IBC) எடுக்க NCLT அமைப்பு முடிவு செய்தது.
வங்கிகள்
பினானி சிமெண்ட் நிறுவனத்தை டால்மியா பார்த் கைப்பற்ற 6,700 கோடி ரூபாய்க்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் நிறுவனம் பினானி சிமெண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பினானி இண்டஸ்ட்ரீஸ் உடன் பினானி சிமெண்ட்-இன் 98.47 சதவீத பங்குகளை 7,266 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற ஒப்புந்தம் செய்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டால்மியா பார்த்
இந்நிலையில் டால்மியா பார்த் மற்றும் அல்ட்ராடெக் நிறுவனங்கள் மத்தியில் போட்டி வெடித்த நிலையில் டால்மியா பார்த் மற்றும் அதன் தாய் நிறுவனங்கள் இணைந்து பினானி சிமெண்ட் மற்றும் அல்ட்ராடெக் எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் சனிக்கிழமை நடந்த முக்கியமான கூட்டத்தில், அல்ட்ராடெக் நிறுவனம் அதிகத் தொகையைக் கொடுத்துள்ள காரணத்திற்காகப் பினானி சிமெண்ட் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்துள்ள வங்கி அனைத்து இந்நிறுவனத்திற்கு (அல்ட்ராடெக்) சாதகமாக நிற்க முடிவு செய்தது.
ஆனாலும் வழக்கின் தீர்ப்புகள் படியே இயக்கும் எனவும் திட்டவட்டமாகவும் வங்கிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
உத்தரவாதம்
இதுமட்டும் அல்லாமல் அல்ட்ராடெக் முடிவை ஏற்கும் பட்சத்தில் பினானி இண்டஸ்ட்ரீஸ் சுமார் 750 கோடி ரூபாய் வைப்பும், 7,266 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.
பினானி இண்டஸ்ட்ரீஸ்
டால்மியா பார்த் தொடுத்த வழக்கில் அல்ட்ராடெக் வெற்றி பெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வங்கி தரப்பு அல்ட்ராடெக் நிறுவனத்திற்குச் சாதகமாக இருக்கும் நிலையில், பினானி இண்டஸ்ட்ரீஸ் வங்கி உத்தரவாதம் மட்டும் கொடுத்தால் போதும்.
முதலீட்டாளர்கள்
இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்தல் கண்டிப்பாக லாபத்தைப் பார்க்க முடியும். மேலும் இந்தியாவில் தற்போது உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சிமெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications