இந்தியாவில் அமேசான் ஆதிக்கத்தைக் குறைக்கவும், வர்த்தகத்தில் அடுத்தகட்டத்தை அடையவும் பிளிப்கார்ட் தனது பெரும் பகுதி பங்குகளை அமெரிக்காவில் ரீடைல் வர்த்தக ஜாம்வானாக விளங்கும் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது.
இந்தப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமேசானும் நுழைந்தது, வால்மார்ட் வாங்கும் அதே அளவிலான பங்குகளைக் கூடுதல் விலைகொடுத்து வாங்க அமேசான் திட்டமிட்டு கோரிக்கையை வைத்த நிலையில் தற்போத வால்மார்ட் திட்டத்தை மாற்றியுள்ளது.
வால்மார்ட்
இந்திய வர்த்தகச் சந்தையைப் பிடிக்கப் போராடி வரும் வால்மார்ட் நிறுவனத்திற்குப் பிளிப்கார்ட் ஒரு ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும். இதற்காகவே கடந்த சில வாரங்களாக அமேசான் போட்டியையும் சமாளித்துப் பிளிப்கார்ட் நிறுவன பங்குகளை வாங்க முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.
51 சதவீத பங்குகள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் திட்ட வால்மார்ட் தற்போது கூடுதலான பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
மதிப்பீடு
தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் கீழ் மைந்திரா, ஜபாங், ஈபே இந்தியா, போன் பே எனப் பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் நிலையில், ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க்-இன் முதலீடு இந்நிறுவனத்தின் மதிப்பைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளது.
அதிரடி உயர்வு
சாப்ட்பேங்க் முதலீட்டின் போது இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 14 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்திருந்தது.
வால்மார்ட் தற்போது முதலீட்டுக்காக வரும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் பிளிப்கார்ட்டின் மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
முதலீடு
இந்நிலையில் வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 10 முதல் 12 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இறுதி முடிவு
இன்னும் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களிடம் இருந்து எவ்விதமான பதில்களும் வரவில்லை.
அது சரி அமேசான் நிலை என்ன..?


Click it and Unblock the Notifications