மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வியையும், மோசமான நிலையில் இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையும் மீட்டு எடுக்க மத்திய அரசு பல முயற்சிகளைச் செய்த வரும் நிலையில், சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி இவ்விரண்டையும் காப்பாற்றும் வகையில் ஒரு அறிவிப்பை வெயிட்டுள்ளது.
சியோமி
சீனா, அமெரிக்கா உடனான அதிகளவிலான வர்த்தகப் பிரச்சனை சந்தித்து வரும் இந்நிலையில், சீன நிறுவனமான சியோமியின் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு, உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
முதலீடும் வேலைவாய்ப்பும்
சியோமியின் கோரிக்கையை ஏற்று இதன் தலைமையில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கச் சுமார் 2.5 பில்லியன் டாலர் வரையில் இந்தியாவில் முதலீடாகக் குவியும், 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனச் சியோமி தெரிவித்துள்ளது.
மோடி அரசு
சேவைத்துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவை உலக நாடுகளுக்கு உற்பத்தி தளமாக இருக்க வேண்டும் என்ற மைய கருத்தில் துவங்கப்பட்ட மேக் இன் இந்தியா கீழ் வெளிநாட்டு நிறுவனங்களைக் கவர தவறியுள்ள நிலையிலும், நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மோசமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் சியோமியின் அறிவிப்பு மோடி அரசுக்குப் பெரிய வாய்ப்பாக இருக்கும்.
வரி விதிப்புகள்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் உதிரிப்பாகங்களுக்கு மீது 10 சதவீத வரியை விதித்தது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் உதிரிப்பாகங்களை இணைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான பின்னடைவு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாகவே சியோமி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
சாம்சங்
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், இதன் இடத்தைச் சியோமி பிடிக்கவும், இந்நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களை விநியோகம் செய்யும் 50 சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி நிகழ்ச்சி
டெல்லியில் நடந்த முக்கியமான முதலீட்டு நிகழ்ச்சியில் 50 நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிப்பு பணிகளைத் துவங்கினால் சுமார் 2.5 பில்லியன் டாலர் முதலீடும், 50,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்க முடியும் எனச் சியோமி தெரிவித்துள்ளது.
6 உற்பத்தி ஆலைகள்
சியோமி மட்டும் இந்தியாவில் 6 ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் வைத்துள்ளது, சீனாவைத் தாண்டி இந்தியாவிலேயே பெரிய அளவிலான சந்தையை வைத்துள்ளது சியோமி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications