ஃபுட்பாண்டா-ஐ தொடர்ந்து பிரெஷ்மெனு நிறுவனத்தை வாங்க துடிக்கும் ஓலா!

வாடகை கார் செயலி நிறுவனமான ஓலா தனது போட்டி நிறுவனங்களான டாக்ஸி ஃபார் ஷூயர், ரிட்லர் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது மட்டும் இல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்யும் செயலி நிறுவனமான ஃபுட்பாண்டாவை வாங்கியது. தற்போது மேலும் உணவு டெலிவரி சேவையில் மெறுகேற்றிக்கொள்ளப் பிரெஷ்மெனு நிறுவனத்தினை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ஓலா நிறுவனம் பிரெஷ்மெனு நிறுவனத்தினை வாங்க முயற்சித்து வருவது மட்டும் இல்லாமல் அதே போன்ற ஒரு வேறு ஒரு நிறுவனத்தினையும் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக இது குறித்த விவரம் அறிந்தவர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

ரகசிய பேச்சுவார்த்தை

ரகசிய பேச்சுவார்த்தை

இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் ஓலா, பிரெஷ்மெனு என இருதரப்பும் இது குறித்து ஒப்புக்கொள்ளவில்லை என்று மட்டும் தெரியவந்துள்ளது. இது குறித்த மின்னஞ்சல் கேள்விக்குப் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

ஓலா

ஓலா

உணவு - டெக் ஸ்டார்ட்அப் துறையில் சிறந்த முறையில் வளர்ச்சி அடைய நடப்பு ஆண்டில் ஓலா நிறுவனம் ஃபுட்பாண்டா நிறுவனத்திற்உ கூடுதலாக முதலீட்டைத் திரட்ட உள்ளது.

ஃபுட்பாண்டா

ஃபுட்பாண்டா

டிசம்பர் மாதம் ஜெர்மன் நிறுவனமான ஹீரோ ஏஜியிடம் இருந்து ஃபுட்பாண்டா இந்தியாவை மட்டும் ஓலா வாங்கியது மட்டும் இல்லாமல் அதன் செயல்பாடுகளை விரிவு படுத்த 200 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஃபுட்பாண்டாவின் இணை நிறுவனரான பிரனாவ் ஜிவ்ராஜ்காவிடம் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பையும் ஓலா அளித்துள்ளது.

பிளிப்கார்ட் போன்ற உத்தி

பிளிப்கார்ட் போன்ற உத்தி

இணையதள ரீடெயில் நிறுவனமான பிளிப்கார்ட் எப்படி ஜபாங், மிந்த்ரா மற்றும் போன்பே என ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களை வாங்கிச் செயல்பட்டு வருகிறதோ அதே போன்று தனித்துவமான உணவு ஸ்டார்ட்அப் நிறுவனமாக வளரவும் ஓலா திட்டமிட்டுள்ளது. ஓலா வாடகை கார் செயலி என மட்டும் இல்லாமல் ஓலா மனி என்ற வாலெட் செயலி சேவையையும் வழங்கி வருகிறது.

ஆன்லைன் உணவு ஆர்டர்கள்

ஆன்லைன் உணவு ஆர்டர்கள்

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 2017-ம் ஆண்டு 2,00,000 ஆக இருந்து தினசரி உணவு ஆர்டர்கள் நடப்பு ஆண்டில் 4,50,000 ஆக உயர்ந்துள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி சந்தை

ஆன்லைன் உணவு டெலிவரி சந்தை

ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் 38 சதவீதம் ஸ்விகியிடமும், 30 சதவீதம் ஜோமேட்டோவிடமும் உள்ள நிலையில், ஃபுட்பாண்டா, உபர் ஈட்ஸ் மற்றும் இதற பிற நிறுவனங்களிடம் 32 சதவீத சந்தை மட்டுமே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+