வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளிக்கப்பட்ட கடனில் இதன் தலைவர் சந்தா கோச்சார் முறைகேடு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகத்தின் ஒரு பிரிவினர் சந்தா கோச்சார் பதவியை விட்டு விலக வேண்டும் எனக் கூறிவரும் நிலையில், மறுபுறம் ஆக்சிஸ் வங்கி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி
இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இருக்கும் ஷிக்கா சர்மா-வின் 4வது 3 ஆண்டுக் காலப் பணிக்கு ஆக்சிஸ் வங்கி நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி ஷிக்காவின் பதவிக்காலத்தைப் பரிசீலனை செய்ய உத்தரவிட்டது.
4வது 3 ஆண்டுக் காலப் பணி
ஷிக்கா சர்மாவின் 4வது 3 ஆண்டுக் காலப் பணி வருகிற ஜூலை 2018 முதல் துவங்க உள்ள நிலையில், ஆக்சிஸ் வங்கியின் உயர்மட்ட நிர்வாகக் குழு ரிசர்வ் வங்கியின் உத்தரவை பரிசீலனை செய்யத் துவங்கியது.
முக்கிய அறிவிப்பு
ஆர்பிஐ உத்தரவை ஏற்ற ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் 3 ஆண்டுக் காலப் பணியை வெறும் 6 மாதமாகக் குறைந்து, ஜூன் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரையில் மட்டும் ஷிக்கா சர்மா ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓவாக இருப்பார் என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
காரணம்
ஷிக்கா சர்மா வெளியேற்றப்பட்டதற்கான காரணம் முழுமையாகத் தெரியாத நிலையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவிற்காகவே ஆக்சிஸ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5 கோடி அபராதம்
2016ஆம் நிதியாண்டில் Income Recognition and Asset Classification (IRAC) பிரிவின் தலைவர்கள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்திற்காக ரிசர்வ் வங்கி ஆக்சிஸ் வங்கி மீது 5 கோடி ரூபாய் அபராதத்தைக் கடந்த மாதம் விதித்தது.
வராக்கடன்
இந்தியாவில் இருக்கும் பல வங்கிகள் வராக்கடன் அளவுகளைச் சரியான முறையில் காட்டாமல் இருக்கிறது, இதில் ஆக்சிஸ் வங்கியும் அடக்கம். சமீபத்தில் ஆக்சிஸ் வங்கியின் வராக்கடன் அளவுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தபோது, ஆக்சிஸ் வங்கி 2016ஆம் நிதியாண்டுக்கான மொத்த வராக்கடன் அளவைக் காட்டியதை விடவும் சுமார் 152 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications