இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் உடன் போட்டி போட வால்மார்ட் உடன் சேர திட்டமிட்டு இருக்கும் பிளிப்கார்ட், பெங்களூரில் நான்கு ஐந்து இடங்களில் இருக்கும் தனது அலுவலகத்தை ஒன்றாக இணைத்து மிகப்பெரிய அளவிலான தலைமை அலுவலகத்தை உருவாக்கியுள்ளது.
சொல்லப்போனால் பெங்களூர் ஐடி மக்கள் மத்தியில் இன்றைய ஹாட் டாபிக் இதுதான்.
பிளிப்கார்ட்
பெங்களூரை தலைமையாகக் கொண்டு இந்தியா முழுவதும் பெரிய அளவிலான ஆன்லைன் ஷாப்பிங் சேவை அளிக்கும் பிளிப்கார்ட் தனது ஒவ்வொரு விரிவாக்கத்தின் போதும் ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் போதும் இடப் பற்றாக்குறையால் பல இடங்களில் இருந்து வர்த்தகத்தையும், தினசரி பணிகளையும் நடத்தி வந்தது.
ஹெட்குவாட்டர்ஸ்
இந்நிலையில் பெங்களூரு முழுவதும் சிதறிக்கிடந்த அலுவலகத்தை முழுமையாக இணைக்கும் வகையில் சுமார் 8.3 லட்சம் சதுர அடி அளவில் அவுட்டர் ரிங் ரோட்டில் இருக்கும் எம்பசி டெக் வில்லேஜ்-இல் புதிதாக ஒரு அலுவலகத்தை அமைத்து மிரளவைத்துள்ளது.
மார்ச் 31
இந்த அலுவலகக் கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது பிளிப்கார்ட் ஊழியர்களின் முழுப் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது.
பார்ட்டி
மேலும் இப்புதிய தலைமை அலுவலகத்தின் துவக்க விழாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் மற்றும் இந்நிறுவனத்தின் சிஇஓ கல்யான் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
முக்கிய அம்சங்கள்
இப்புதிய அலுவலகத்தில் பேஸ்கட்பால், ஷெட்டில், கால்ப், VR, விர்ச்சுவல் கால்ப், பல்வேறு விதமான புதிர் விளையாட்டுகள், ஸ்னூக்கர் என அலுவலகம் முழுவதும் கொண்டாட்டகள் நிறைந்து உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இன்றைய மார்டன் அலுவலக அமைப்பு ஏற்ற வகையில் அலுவலகம் வண்ணமயமாக உள்ளது.
சிறிய நகரம்
இந்த அலுவலகத்தைப் பார்க்கும் போது ஒரு சிறிய நகரத்தைப் போலவே உள்ளது, மேலும் ஐரோப்பிய டவுன் கலாச்சாரத்தை வைத்து இந்த அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வீடியோ
பிளிப்கார்ட்-இன் இந்தப் புதிய அலுவலகத்தின் அசத்தலான வீடியோ.
வெளியில கூட சொல்ல முடியாதே..!
யாருமே இல்லையா..?


Click it and Unblock the Notifications