மத்திய அரசு வருமான வரி விதிகளில் திருநங்கைகளுக்கும் நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டு அளிப்பதற்கு ஏற்றவாறு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் படி மத்திய நேரடி வரி ஆணையம் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது புதிதாக விரைவில் ஆண், பெண் பாலினம் மட்டும் இல்லாமல் திருநங்கைகளுக்கான தேர்வையும் அறிமுகம் செய்யும்.

திருநங்கைகளால் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்ய முடிவதில்லை, அவர்களால் அதார் கார்டை மட்டுமே இவர்களுக்கான பாலின அடையாள ஆவணமாக பயன்படுத்த முடிகிறது. இதனால் பான் மற்றும் ஆதார் இனைப்பும் செய்ய முடிவதில்லை. புதிய விதிகளால் பான், ஆதார் இணைப்பைச் செய்து இவர்களாலும் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.
2018 மார்ச் 5-ம் தேதி வரையிலான தரவுகளின் படி 16.65 கோடி நபர்கள் பான் கார்டு பெற்றுள்ளனர். அதில் 33 கோடி நபர்கள் ஆதார் கார்டு இணைப்பினை செய்துள்ளார்கள். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018 ஜூன் 30 என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications