இந்திய ரயில்வே நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டு வரை பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 12,000 குதிரைத்திறன் கொண்ட அதிவேக ரயில் எஞ்சினை இந்திய ரயில்வேஸ் மற்றும் ஜெர்மனியின் ஆல்ஸ்டாம் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தியாவின் முதல் 12,000 குதிரைத்திறன் கொண்ட அதிவேக ரயில் எஞ்சின் முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலையில் அதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கொடி அசைத்துச் சோதனை ஓட்டத்திற்காகத் துவக்கி வைத்துள்ளார்.
சோதனை ஓட்டம்
சோதனை ஓட்டத்தினைச் செய்யும் ரயில் எஞ்சினானது பீகாரின் மாதேபுராவில் இருந்து கிளம்பி உத்திர பிரதேசத்தின் சஹாரான்பூர் வரை செல்ல இருக்கிறது.
கூட்டுஸ்தாபனமானம்
மின்சார ரயில் எஞ்சின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆல்ஸ்டாம்க்கு இந்த நிறுவனத்தில் 76 சதவீதமும், இந்தியன் ரயில்வேஸ்க்கு 24 சதவீதமும் பங்குகளாக உள்ளன. இந்த 3.5 பில்லியன் யூரோ திட்டம் தான் இந்தியன் ரயில்வே நிர்வாகத்திற்கு வந்துள்ள மிகப் பெரிய அன்னிய நேரடி முதலீடாகும்.
சரக்கு ரயில் போக்குவரத்து
புதிய அதிகச் சக்தி கொண்ட மின்சார எஞ்சின் சரக்குப் போக்குவரத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும், டீசல் எஞ்சினுடன் ஒப்பிடும் போது கற்று மாசுபடாமல் அதிக எடையினை இழுத்துச் செல்லும்.
ரயில் போக்குவரத்திற்கு மிகப் பெரிய போட்டியாகச் சாலை போக்குவரத்து இருக்கும்பட்சத்தில் வேகமாகச் சரக்குப் போக்குவரத்தை ரயில்கள் மூலம் செய்ய ஏற்றதாக இந்த எஞ்சின் இருக்கும்.
திறன்
WAG12 (Prima 8) என்ற இந்த ரயில் எஞ்சினானது 6,000 டன் எடை வரை இழுத்துக்கொண்டு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த எஞ்சினின் 90 சதவீத பாகங்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்றும், மின்சாரத்தினையும் குறைந்த அளவில் தான் பயன்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆல்ஸ்டாம்
ஆல்ஸாடம் நிறுவனம் 800 மின்சார லோக்கோ எஞ்சின்களைத் தயாரித்து இந்தியன் ரயில்வேஸ்க்கு அளிக்க உள்ளது மட்டும் இல்லாமல் அவற்றை 11 ஆண்டுகள் வரை பராமரிப்பு செய்யவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.
பராமரிப்பு
ரயில் எஞ்சின் பராமரிப்பு பணிகளுக்காக ஆல்ஸ்டாம் நிறுவனம் உத்திர பிரதேசத்தின் சஹாரான்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் நாக்பூரிலும் வசதிகளைச் செய்துள்ளது.
வேலைவாய்ப்பு
இந்தியன் ரயில்வேஸ் மற்றும் ஆல்ஸ்டாம் நிறுவனங்களின் கூட்டுஸ்தாபனமான இதில் பீகார், மகாராஷிடாரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 10,000 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உற்பத்தி
சோதனை ஓட்டமாக ஒரு எஞ்சின் இன்று சென்றுள்ள நிலையில் மேலும் மூன்று எஞ்சிகளை ஆல்ஸ்டாம் சோதனைக்காக அளிக்க உள்ளது. புதிய எஞ்சின்களைப் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த உடன் 3 நாட்களுக்கு ஒரு எஞ்சின் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஆல்ஸ்டாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோ
பிரதமர் மோடி துவக்கி வைத்த 12,000 குதிரைத்திறன் கொண்ட அதிவேக ரயில் எஞ்சின் வீடியோ.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications