மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காமின் 2018-2019 ஆண்டிற்கான தலைவராக விப்ரோ நிறுவனத்தின் மூத்த வீயூக அதிகாரியான ரிஷாத் பிரேம்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாத் பிரேம்ஜி நாஸ்காமின் 2017-2018 நிதி ஆண்டிற்கான துணை தலைவராகவும் இருந்துள்ளார். ரிஷாதிற்கு முன்பு நாஸ்காமின் தலைவராகக் குவாட்ரோ குலோபள் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமன் ராய் இருந்தார். எனவே நாஸ்காமின் 2018-2019 ஆண்டிற்கான துணைத் தலைவராகக் கேஷ் முடுகேஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் உருமாற்றத்தின் நம்பிக்கையாக நிற்கும் நாஸ்காமின் தலைமைக்கான குழுவினர்களின் நம்பிக்கை தான் பெற்று இருப்பது மகிழ்ச்சி என்றும், இவர்களுடன் ஒன்றிணைந்து வளர்ச்சிக்காகத் தான் உதவுவேன் என்றும் ரிஷாத் தெரிவித்துள்ளார்.
நாஸ்காம் தலைமையிலான இந்தக் குழுவானது ஐடி ஊழியர்களின் திறன் வளர்ப்பு மற்றும் ஐடி துறையின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல உதவுவார்கள்.


Click it and Unblock the Notifications