இந்தியா, அமெரிக்காவிற்கு இணையாக ஒரு வல்லரசு நாடாக மாறப்போகிறது என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் மக்களின் ஏகோபித்த வாக்குகளுடன் மோடி பிரதமர் ஆன அந்தத் தருணத்தை நாம் மறக்க முடியாது. இதுமட்டும் அல்லாமல் இந்த 4 ஆண்டுக் காலத்தில் மோடியின் தொடர் வெளிநாட்டு பயணத்தால் பல நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவும் மேம்பட்டதையும் பார்த்தோம்.
மோடி தலைமையிலான பிஜேபி கட்சியின் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியத் திட்டங்களால் நாட்டின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பு சந்தையும் தற்போது தடமாறி போய் நிற்கிறது.
இத்தகைய சூழ்நிலையிலும் 2016-17ஆம் நிதியாண்டில் மோடியின் பிஜேபி கட்சியின் வருமானம் சுமார் 81.18 சதவீதம் உயர்த்துள்ளது.
அரசியல் கட்சிகள்
2016-17ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி), என்சிபி (Nationalist Congress Party), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுமார் 1,559.17 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைக் கணக்கில் காட்டியுள்ளனர்.
இதில் 1,228.26 கோடி ரூபாய் செலவும் செய்துள்ளது எனத் தேர்தல் ஆணையத்திற்கு இக்கட்சிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ளது.
காலத் தாமதம்
தேர்தல் ஆணையத்திடம் வருமான அறிக்கையைச் சமர்ப்பிக்க 30 அக்டோபர் 2017ஆம் தேதியே கடைசி என அறிவிக்கப்பட்ட நிலையில் நாட்டின் முன்னணி கட்சிகள் அறிக்கையைச் சமர்ப்பித்த நாட்களைப் பாருங்கள்
பகுஜன் சமாஜ் கட்சி, என்சிபி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சரியான நேரத்திற்குள் சமர்ப்பித்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 22 நாட்கள் தாமதமாகவும், என்சிபி 79 நாட்கள் தாமதமாகவும், பிஜேபி 99 நாட்கள் தாமதமாகவும், காங்கிரஸ் 138 நாட்கள் தாமதமாகவும் வருமான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
பிஜேபி
2015-16ஆம் ஆண்டில் இந்தியாவில் நிறைந்த கட்சியாகக் கருதப்படும் பிஜேபி வெறும் 570.86 கோடி ரூபாய் மட்டுமே மொத்த வருமானமாகக் கணக்கு காட்டிய நிலையில் 2016-17ஆம் ஆண்டில் அதாவது வெறும் ஒரு ஆண்டுக் காலத்தில் இக்கட்சியின் வருமானம் சுமார் 1,034.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது கிட்டத்தட்ட 81.18 சதவீதம் அதிகமாகும்
காங்கிரஸ்
அதேபோல் 2015-16ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் மொத்த வருமானம் 261.56 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2016-17ஆம் நிதியாண்டில் 14 சதவீதம் குறைந்து 225.36 கோடி ரூபாயாகக் கணக்கு காட்டியுள்ளது.
செலவுகள்
2016-17ஆம் நிதியாண்டில் பிஜேபி கட்சியின் மொத்த வருமானமான 1,034.27 கோடி ரூபாயில் 710.057 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் காட்டியுள்ளது, அதேபோல் காங்கிரஸ் கட்சி வருமானத்தை விடவும் அதிகமாக, அதாவது 321.66 கோடி ரூபாய் அளவில் செலவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எப்படி..?
பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் 3 முக்கிய வருமான வழிகளில் நன்கொடை/பங்களிப்பு ஆகியவை முக்கியமானதாக உள்ளது, இதன் மூலம் பிஜேபி 997.12 கோடியும் (மொத்த வருமானத்தில் இது 96.41%), காங்கிரஸ் 50.626 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.
மேலும் காங்கிரஸ் கூப்பன் வாயிலாகச் சுமார் 115.644 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
முக்கியச் செலவுகள்
2016-17ஆம் நிதியாண்டில் பிஜேபி தேர்தல் மற்றும் இதர பிரச்சாரங்களுக்காகச் சுமார் 606.64 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது, இதைத் தொடர்ந்து நிர்வாகச் செலவாக 69.78 கோடி ரூபாய்ச் செலவாகியுள்ளதாக இக்கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இக்காலகட்டத்தில் தேர்தல் மற்றும் இதர பிரச்சாரங்களுக்காக 149.65 கோடி ரூபாயும், நிர்வாகச் செலவுகள் மற்றும் பொதுச் செலவுகள் என்ற பெயரில் 115.65 கோடி ரூபாயைக் கணக்கு காட்டியுள்ளது.
சிபிஎம்
2015-16இல் 107.48 கோடி ரூபாய் வருமானமாகப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2016-17ஆம் நிதியாண்டில் 100.256 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாகப் பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி
2015-16இல் 47.385 கோடி ரூபாய் வருமானமாகப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி (மார்க்சிஸ்ட்) 2016-17ஆம் நிதியாண்டில் 173.58 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ்
2015-16ஆம் நிதியாண்டில் 34.578 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் 2016-17இல் 6.39 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாகப் பெற்றுள்ளது.
என்சிபி
2015-16ஆம் நிதியாண்டில் 9.137 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்ற என்சிபி கட்சி 2016-17இல் 17.235 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாகப் பெற்றுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2015-16இல் 2.176 கோடி ரூபாய் வருமானமாகப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2016-17ஆம் நிதியாண்டில் 2.079 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது.
7 கட்சிகள்
இங்குப் பட்டியலிட்டுள்ள நாட்டின் முன்னணி 7 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 74.98 சதவீத தொகை தன்னார்வ பங்களிப்பின் மூலம் பெற்றுள்ளது.
வங்கி மற்றும் வைப்பு நிதி
மேலும் 7 கட்சிகள் வங்கி மற்றும் வைப்பு நிதி மூலம் சுமார் 128.60 கோடி ரூபாய் அளவிலான வட்டி வருமானத்தைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications