2016-17ஆம் நிதியாண்டு முடிந்த நிலையில் மாத சம்பளக்காரர்கள் அனைவரும் புதிய வருடத்திற்கான சம்பள உயர்வை எதிர்நோக்கி வரும் நிலையில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
ஊதிய உயர்வு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் சராசரியாக 9.6 சதவீத ஊதிய உயர்வு பெறுவார்கள், அதேபோல் திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு 14.7 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என முன்னணி ஆய்வு நிறுவனமான கேபிஎம்ஜி தெரிவித்துள்ளது.
ஆய்வு
கேபிஎம்ஜி நிறுவனம் இந்தியாவில் சுமார் 18 துறையில், 270 நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளில் இந்த வருடம் சராசரி சம்பள உயர்வு ஒற்றை இலக்க அளவாக மட்டுமே இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரிவு..
2017-18 நிதியாண்டுக்கான இந்நிறுவன ஆய்வில் சராசரி சம்பள உயர்வு 9.7 சதவீதமாக இருக்கும் என அறிவித்த நிலையில், உண்மையான நிலையில் இது 9.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திறன் ஆய்வு
மேலும் 120 நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வில் ஹெச்ஆர் பிரிவு அதிகாரிகள் கூறிய முக்கியத் தகவல் என்னவென்றால், இந்த வருடம் பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களின் திறனை உன்னிப்பாகக் கவனித்து, திறமையானவர்களுக்கு மட்டுமே அதிக ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications