பென்ஷன் கணக்குடன் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்காத ஓய்வூதியதார்களுக்கு ஊழியர்கள் பென்ஷன் அளிப்பது மறுக்கப்படக் கூடாது என்றும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய ஆணையமானது வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களிடம் மூத்த குடிமக்களைச் சுற்றலில் விடாமல் ஊழியர்கள் பென்ஷன் பணத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
புகார்
வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு பென்ஷன் பெறும் போது ஆதார் இணைப்பில் சிக்கல் உள்ளதாக தொடர்ந்து பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கைவிரல் ரேகை
மூத்த குடிமக்கள் ஆதார் சரிபார்ப்பு செய்யும் போது கைவிரல் ரேகை எடுப்பதில் வங்கிகளுக்குச் சிக்கல் உள்ளதால் கண்களை ஸ்கான் செய்யும் ஐரிஸ் ஸ்கான் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் கைவிரல் ரேகை பிரச்சனை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரிஸ் ஸ்கான்
ஒருவேலைக் கைவிரல் ரேகை மற்றும் ஐரிஸ் ஸ்கான் முறை என இரண்டும் சரியாகச் செயல் புரியவில்லை என்றால் பேப்பர் லைப் சர்ட்டிபிகேட் மற்றும் ஆதார் கார்டு நகல் அல்லது இ-ஆதார் சரிபார்ப்பு முறையில் பென்ஷன் பணத்தினை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடு
ஆதார் சேர்க்கை மையங்களுக்கு வர முடியாது மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் சிறப்புச் சேவையினை அறிமுகம் செய்து பென்ஷன் பணத்திற்கு இடையூறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் லைப் சர்டிபிகேட் முறையில் பென்ஷன் பெற பையோமெட்ரிக் விவரங்களை ஒரு முறை அளிக்க வேண்டி வரும்.
ஆதார் ஆணையம்
இந்திய தனி நபர் அடையாள ஆணையம் இது வரை ஆதார் எண் உள்ளிட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற்ற ஊழியர்கள் யாருக்கும் பென்ஷன் அளிப்பது மறுக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications