உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி ஆரம்கோ மகாராஷ்டிராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து 50 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது.
சர்வதேச எரிசக்தி மன்றத்தின் (IEF) மாநாட்டில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மோடியின் முன்னிலையில் கையெழுத்தானது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா முதலீடு செய்ய முன்னுரிமை அளிக்கும் இடமாக இந்தியா இருப்பதாகவும், மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு வெளியிலும் அராம்கோ தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடி வருகிறது என்றும் சவுதி எண்ணெய் துறை மந்திரி காலித் ஏ அல்-ஃபாலிஹ் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய்
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சவுதி அரேபியா இந்தியாவிற்கு 60 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
50 சதவீத பங்குகள்
பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தின் மீதம் உள்ள 50 சதவீத பங்குகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மோடி
சர்வதேச எரிசக்தி மன்றத்தின் (IEF) மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று நியாயமான மற்றும் பொறுப்பான விலைக்கு அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் எரிசக்தியை எளிதில் அணுகுவதற்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழைகளும் அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் வாங்கக் கூடிய எரிபொருட்கள் இந்தியாவுக்குத் தேவை என்றும் அடுத்த 2 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் மோடி கூறினார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications