நோ டென்சன்.. ரிலாக்சா வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க ஏற்ற நிதியியல் சார்ந்த பணிகள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

நிதியியல் மற்றும் வணிகம் தொடர்பான அறிவு மிகுந்தவர்கள் வேலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தாலும் வேலைக்கான ஆஃபர்கள் அவர்களின் வீடு தேடிவரும். தேடிவரும் வேலையையும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம்.

ஒவ்வொரு நாளும் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்கின்ற பரபரப்பில்லாமல், மேலாளரின் கண்காணிப்பும் இல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஜாலியாகச் செய்கின்ற மாதிரி வேலையிருந்தால் எப்படி இருக்கும்? நிறைய நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே செய்கின்ற வகையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. சில நிறுவனங்களில், வாரம் ஒரு முறை அல்லது இருமுறை மட்டும் ஆய்வுக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றால் போதுமானது.

வீட்டில் வசதியாக அமர்ந்துகொண்டு மேற்கொள்வதற்கு ஏற்ற நிதி மற்றும் வணிக நிறுவனம் சார்ந்த பணிகளின் பட்டியலை எடுத்தால் அது நீண்டு கொண்டே போகும். நிறுவனங்கள் வழங்கும் பெரிய பொறுப்புக்களை முழுநேரமாகச் செய்வது முதல் பல நிறுவனங்களுக்காக அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வெளியிடும் பணிகள் வரை வீட்டிலிருந்தே செய்யலாம். அவற்றுள் ஆறு வகையான நிதிசார் பணிகளை மட்டும் இங்குக் காணலாம்.

அன்றாடப் பங்கு வணிகம் (Day Trader)

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் துல்லியமாகக் கணிப்பதில் நீங்கள் கில்லாடியா? அப்படியென்றால் வீட்டிலிருந்தபடியே தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். தினமும் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் இலாபம் ஈட்டலாம். இலாவகமான விலை வரும்பொழுது குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி, இலாபகரமான விலை வரும்பொழுது அன்றைய சந்தை முடிவதற்குள் விற்றுவிட வேண்டும். உங்களுடைய வங்கிக் கணக்கில் வருமானம் ஏறிவிடும். வீட்டிலிருந்தே கணிப்பொறியின் முன்னால் அமர்ந்து கொண்டு வணிகத்தைச் சரியாகக் கணித்துச் செயல்பட்டால் வெற்றியுடன் வலம் வரலாம்.

கணக்காளர் பணி

அக்கவுண்ட்ஸ் பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமா? அப்படியென்றால் நீங்களும் வீட்டில் அமர்ந்துகொண்டு வேலை செய்து சம்பாதிக்கலாம். நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான, வருமானவரிக் கணக்கீடு, ஊழியர்களுக்கான சம்பளப்பட்டியால் தயாரித்தல், கணக்குகளில் உள்ள முறைகேடுகளை ஆய்வு செய்தல், நிதி மேலாண்மை செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய வருமானம் மற்றும் செலவுக் கணக்குகளைப் பராமரிக்க இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை வலைவீசி அள்ளிக்கொள்ளக் காத்திருக்கின்றன. நிறுவனத்தின் நிதியறிக்கைகளை ஆய்வு செய்தல், கணக்குகளைத் தணிக்கை செய்தல் ஆகியவற்றில் மிகுந்த அனுபவம் மிக்கவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். வணிக நிறுவனங்களை நடத்துவோர் மற்றும் சொந்தமாகத் தொழில் செய்யும் உரிமையாளர்கள் என அனைவருக்கும் திறன் மிகுந்த கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர்.

நிதி ஆலோசகர்ப் பணி

பெரும் அளவில் முதலீடு செய்து இலாபம் ஈட்ட வேண்டும் என நினைப்பவர்கள் அதற்குத் தகுந்த நிதி ஆலோசகர்களை நாடுகின்றனர். மாத சம்பளம் வாங்குவோரும் தங்களுக்கேற்ற முதலீடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் நபர்களை நாடுகின்றனர். பங்கு முதலீடு, ஓய்வூதியத் திட்டங்கள், பரஸ்பர நல நிதியத் திட்டங்கள், ஆயுள் காப்பீடு, ரியல் எஸ்டேட், வருமான வரிச் சேமிப்புத் திட்டங்கள் ஆகியன குறித்து "அ" முதல் "ஃ" வரை தெரிந்து வைத்திருந்தால் போதும், ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு அள்ளி வழங்கி அதன் மூலம் வருமானம் ஈட்டமுடியும். நிதி ஆலோசகர்கள், தங்களை நாடி வருவோரின் தேவைகளை அறிந்து அவர்களின் மனநிலை மற்றும் பொருளாதார நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்ற ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

நிதியியல் எழுத்தாளர் (Financial Writer)

வீட்டிலிருந்து செய்வதற்கு ஏற்ற மிகவும் பொருத்தமான மற்றும் எளிமையான வேலை இது. நிதி மேலாண்மை மற்றும் வணிகம் தொடர்பான கருத்துக்களை அத்துறையில் இருப்பவர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கு ஏற்ற எழுத்தாளர்கள் இன்றைய வணிக உலகத்துக்குத் தேவைப்படுகின்றனர். என்ன எழுதவேண்டும் என்பது குறித்து நம்மைப் பணியில் அமர்த்தும் நிறுவனம் முடிவு செய்யும். எது குறித்து எழுத வேண்டுமோ அது தொடா்பான தலைப்புகள் நமக்கு மின்னஞ்சல் அல்லது வெப் சர்வர் மூலமாக அனுப்பி வைக்கப்படும். கொடுக்கப்பட்ட தலைப்பிற்கேற்ற கருத்துக்களைத் தொகுத்து எழுதி அனுப்புவதுதான் நம்முடைய வேலை. குறிப்பிட்ட காலத்திற்குள் இப்பணியை முடித்துக் கொடுக்க வேண்டும். வணிகம் மற்றும் நிதியியல் தொடர்பான அறிவும் எழுத்தாற்றலும் இருந்தால் நமக்கெனத் தனி முத்திரை பதித்து இப்பணியில் வீட்டிலிருந்தபடியே வெற்றிக் கொடி நாட்டலாம்.

நிதியியல் ஆய்வாளர் (Financial Analyst)

வணிகச் சந்தையின் தற்போதைய நிலவரம் எதிர்காலப் போக்கு ஆகியவற்றைச் சரியாகக் கணித்துச் செயல்பட, ஆழ்ந்த நிதியியல் அறிவும் கவனம் சிதறாத கூர்நோக்கும் தேவைப்படுகிறது. இந்த இரண்டும் உங்களிடம் உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்கு வேலைத் தயார். எங்கே கிளம்பிட்டீங்க.. வீட்டிலிருந்தே வேலையைக் கவனிக்கலாம் அப்படியே உட்காருங்கள். பொருளாதாரப் புள்ளி விவரங்கள், வணிகக் கணக்கீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முதலீட்டுக்கான வாய்ப்புகள், அதில் வரக்கூடிய இலாப நஷ்டங்கள் ஆகியவற்றைச் சரியாகக் கணித்து, உங்களை நாடி வருவோருக்கு ஆலோசனைகளை வழங்குங்கள் அதுதான் உங்களுக்கான வேலை. தற்கால வணிக உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலும், கிடைக்கும் புள்ளிவிவரங்களைக் கொண்டு சந்தையின் போக்கைச் சரியாகக் கணிக்கும் திறனும் இந்த வேலைக்கு மிகவும் அவசியம். சந்தைப் பொருளாதாரத்தைப் பரந்த அளவிலும் மிக நுணுக்கமாகவும் ஆராய்ந்து அதனை நாம் எந்த நிறுவனத்துக்காகப் பணியாற்றுகிறோமோ அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதனடிப்படையில் அந்நிறுவன வளர்ச்சிக்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும். நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து எந்நிறுவனப் பங்குகளை வாங்கலாம், எந்நிறுவனத்தின் பங்குகளை விற்கலாம் என்கின்ற பரிந்துரைகளையும் தேவைப்படுவோருக்கு வழங்க வேண்டும்.

நிதியியல் திட்ட வரைவாளர் (Financial Planner)

வணிக நிறுவனங்கள், தங்களுடைய செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, ஆராய்ந்து எதிர்கால வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு ஏற்ற நபர்களைப் பணியில் அமர்த்தக் காத்திருக்கின்றன. நீங்கள் அனுபவமிக்க நிதித் திட்ட வரைவாளராக இருந்தால் வீட்டிலிருந்தே இந்த வேலையைச் செய்யலாம். நிதியியல், வணிகவியல், நிர்வாகவியல், பொருளியல், புள்ளியியல், அக்கவுண்டிங் போன்ற பல துறைகள் சார்ந்த அறிவு இந்த வேலைக்குத் தேவை. நிறுவன நிதி சார்ந்த அறிவு மட்டும் அல்லாமல் தனிநபர் சார்ந்த நிதியியல் அறிவும் இப்பணிக்குத் தேவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Six finance related jobs to make money from home

Six finance related jobs to make money from home
Story first published: Wednesday, April 11, 2018, 13:43 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns