ஸ்மார்ட் டிவி போலத் தற்போது ஸ்மார்ட் ஸ்பீக்கர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகிறது. உலகில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது இதைச் சுற்றியே வருகிறது, இதைச் சாமானியர்களுக்குக் கிடைக்கும் வகையில் வடிவமைத்து மக்களுக்கு முதல் முறையாக அறிமுகம் செய்தது ஸ்டீவ் ஜாப்ஸ் தான்.
1962 இல் மனிதனுடைய பேச்சுகளைப் புரிந்துக்கொண்டு இயங்கும் இயந்திரத்தை ஐபிஎம் உருவாக்கியது இதன் பெயர் ஐபிஎம் ஷூபாக்ஸ், இதன் பின்பு 1994இல் ஐபிஎம் சிமன் என்னும் ஸ்மார்போன் அறிமுகம் செய்து ஸ்மார்ட் ஸ்பீக்கருக்கு அடித்தளமான ஸ்மார்ட் விர்சுவல் அசிஸ்டன்ஸ் வித்திட்டது.

இதன் பின் ஆப்பிள் நிறுவனம் தான் முதன் முதலில் ஸ்மார்ட் விர்சுவல் அசிஸ்டன்ஸ் மக்கள் பயன்பாட்டுக்காகத் தனது ஐபோன் 4எஸ் ஸ்மார்ட்போனில் சிரி (Siri) என்ற பெயரில் அறிமுகம் செய்தது.
தற்போது இந்தத் தொழில்நுட்பம் பல வகையில் மேம்பட்டு முக்கியச் சேவைகள் அனைத்தும் வெறும் வாய்சொல் மூலம் செய்யக்கூடிய அளவிற்கு உயர்ந்துள்ளது. அமேசானின் எக்கோ-விற்குப் போட்டியாகக் கூகிள் நிறுவனம் கூகிள் ஹோம் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் அமேசானின் எக்கோ டாட்-க்குப் போட்டியாகக் கூகிள் ஹோம் மினியை அறிமுகம்படுத்திய அசத்தியுள்ளது. இதன் செயல்பாட்டைப் பார்க்கக் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
கூகிள் ஹோம் மின் வாங்க இதை கிளிக் செய்யவும்.
அமேசான் எக்கோ மினியில் அசத்தலான் வீடியோ
அமேசான் எக்கோ மினி வாங்க இதை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications