இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி சென்ற வருட பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 2018-ம் ஆண்டு 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2017 டிசம்பர் மாதம் 7.1 சதவீதமாக இருந்து இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 2018 ஜனவரியில் 7.5 சதவீதமாக உயர்ந்த நிலையில் மீண்டும் பிப்ரவரி மாதம் 7.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.
சில்லறை பணவீக்கமானது பிப்ரவரி மாதம் 4.44 சதவீதமாக இருந்த நிலையில் மார்ச் மாதம் 4.28 சதவீதமாகக் குறைந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடும் 5 மாதம் இல்லாத அளவிற்குக் குறைந்திருக்கிறது.

அன்மை தரவுகளை வைத்துப் பார்க்கும் போது டிசம்பர் மாதம் 17 மாத உயர்வைப் பணவீக்கம் சந்தித்ததினை அடுத்து ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 3 மாதமாகக் குறைந்து வருகிறது.
பொருளாதார நிபுணர்கள் பணவீக்கமானது வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சென்ற வாரம் இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினைக் குறைக்காமல் 6 சதவீதமாக நீட்டித்தது. அதுமட்டும் இல்லாமல் ஜனவரி - மார்ச் பணவீக்க கணிப்பினை 5.1 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும் குறைத்து அறிவித்தது.
ஆர்பிஐ வங்கி 2018-2019 நிதி ஆண்டுக்கான நுகர்வோர் விலை குறியீடு பணவீக்கம் முதல் அரையாண்டில் 5.1 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக இருக்கும் என்றும் இரண்டாம் பாதியில் 4.4 சதவீதமாக இருக்கும் என்றும் இது வீட்டு வாடகை படி உட்பட என்று தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications