ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜியோ மனி வாலெட் செயலியின் உதவியுடன் ரீடெய்ல், ரெஸ்டரண்ட்களில் சொடெக்சோ கூப்பனை பயன்படுத்தும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளனர்.
சொடெக்சோ வாடிக்கையாளர்களும் ஜியோ மனி சேவையினைப் பயன்படுத்தித் தாங்கள் பெறும் சேவைகளுக்கும், உணவுகளுக்கும் பணத்தினைச் செலுத்த முடியும்.
சொடெக்சோ
சொடெக்சோ சேவையினை நாடு முழுவதும் 1,00,000 வணிகர்கள் பயன்படுத்தி வருவதாகவும், அடுத்த 2 அல்லது 3 வருடத்தில் இதனை 3 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொடெக்சோ எஸ்விசி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஸ்டீபன் மிச்செலின் தெரிவித்துள்ளார்.
நன்மை
ஜியோவுடன் கூட்டு சேர்ந்து சொடெக்சோ சேவையினை அளிக்கும் போது 2018 ஆகஸ்ட் மாதத்திற்குள் கூடுதலாக 10,000 வணிகர்களைப் பெற முடியும் என்றும், இந்தத் திட்டத்தினை இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பயனாளிகள்
சொடெக்சோ சேவையினை 30 லட்சம் இந்தியர்கள் தினமும் பயன்படுத்தி வருகிறனர், ஜியோவுடன் கூட்ட சேரும் போது இந்த எண்ணிக்கையானது 1 கோடி வரை எளிமையாக அடைய வழிவகைச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி
ரிலையன்ஸ் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி செவை ஏப்ரல் மாதம் முதல் துவங்கப்பட்டுள்ள நிலையில் அதன் தக்கத்தினை வேகமாக மக்களிடம் கொண்டு செல்ல சொடெக்சோ உதவும் என்று ரிலையன்ஸ் நம்புகிறது.
கார்டு தேவையில்லை ஜியோ மனி போதும்
எனவே சொடெக்சோ பயனர்கள் இனி கார்டினை எடுத்துச் செல்லாமல் அவர்களது ஸ்மார்ட்போன்களில் ஜியோ மனி செயலியினை நிறுவி இருந்தால் போதும் சொடெக்சோ உணவு கூப்பனை எளிதாகப் பயன்படுத்திச் சேவையினைப் பெற முடியும். இதற்காக விளம்பர நடவடிக்கையில் இரண்டு நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதே போன்ற ஒரு சேவையினைப் பேடிஎம் நிறுவனமும் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications