டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ஜாக் டோர்சே 2017-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக எனக்கு எந்தச் சம்பளமும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மைக்ரோ பிளாகிங் சமுக வலைத்தளமான டிவிட்டரில் இவர் ஒரு ரூபாய் கூடச் சம்பளம் பெறவில்லை என்பதைக் கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
காரணம்
டிவிட்டர் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சி மதிப்பினை கருதி தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சே 2017-ம் ஆண்டுக்கான சம்பளத்தினைப் பெறவில்லை என்பது அமெரிக்கச் செக்யூரிட்டி & எக்ஸ்சேஞ் கமிஷனில் தாக்கல் செய்த அறிக்கை மூலமாகத் தெரியவந்துள்ளது.
பங்குகள்
ஜாக் டோர்சே வசம் டிவிட்டர் நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு சென்ற ஆண்டு மட்டும் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
2018 ஏப்ரல் 2-ம் தேதி வரை டிவிட்டர் நிறுவனத்தில் ஜாக் டோர்சேவுக்கு 18 மில்லியன் பங்குகள் உள்ளதாகவும் அதன் மதிப்பு 529 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர் வசம் மொத்த பங்குகளில் 2.39 சதவீதம் உள்ளது.
தலைமை நிதி அதிகாரி
தலைமை நிர்வாக அதிகாரி சம்பளம் பெறாத நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நெட் சீகல் 2017-ம் ஆண்டு 14.3 மில்லியன் டாலர் ரூபாயினைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
டிவிட்டர்
டிவிட்டர் உலகளவில் 330 மில்லியனுக்கும் அதிகமான அக்டிவ் பயனர்களைக் கொண்டுள்ளது. தற்போது நிறுவனத்தின் செல்வ வளத்தினை அதிகரிக்கப் பல்வேறு வகையில் ஜாக் டோர்சே செயல்பட்டு வருகிறார்.
அலவென்ஸ்
2016 ஆம் ஆண்டில், டோர்சே தனிப்பட்ட செலவுகள் மற்றும் குடியிருப்புப் பாதுகாப்பு செலவினங்களுக்க 68,506 அமெரிக்க டாலரினை பெற்றுள்ளார்.
ஸ்கொயர் - பேமெண்ட்ஸ் நிறுவனம்
பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயரிலும் ஜாக் டோர்சே தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள நிலையில் அதில் இவருக்கு 65.5 மில்லியன் பங்குகள் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு 3.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications