உலகில் மனிதர்களிடம் எளிதாகச் சென்று அடையக்கூடிய பொருட்டுகளில் முதல் இடத்தைப் பிடிப்பது எது தெரியுமா 'கோகோ கோலா'. ஒரு நாளைக்கு ஏறத்தாழ 1.6 பில்லியன் முறை மனிதர்கள் ஏதேனும் ஒரு கோகோ கோலா தயாரிப்பைக் குடித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கோகோ கோலா குளிர்பானத்தின் முக்கியமான அம்சமே அதன் ரகசிய சுவை ஊட்டும் பார்முலா தான்.

ஜான் பெம்பர்டன் தான் கோகோ கோலா-வை உருவாக்கியவர். 1888ஆம் ஆண்டில் இவரின் மரணத்திற்கு முன்பு அந்த ரகசிய பார்முலாவை நான்கு நபர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இந்தப் பார்முலா கலவை உலகின் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோக் தயாரிப்பு ஆலைக்குத் தலைமை இடத்தில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகிறது.
உலகின் ஆல்கஹால் இல்லாத குளிர்பானத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 670 பில்லியன் டாலர் ஆகும், இதில் பெரும் பங்கு கோகோ கோலா-விற்குத் தான். கோகோ கோலா சுமார் 206 நாடுகளில் அதன் பானங்களை விற்று வருகிறது, இது ஐநா சபையில் இருக்கும் நாடுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பாரம்பரியமான கோகோ கோலா-வை ஒரு நாளைக்கு 800 மில்லியன் மக்கள் விரும்பிப் பகிர்கின்றனர் என்றால் இந்நிறுவனம் எவ்வளவு வேகமாகத் தயாரிக்க வேண்டும்.
கோகோ கோலா வின் அதிநவீன மற்றும் அதிவேக தயாரிப்பு முறையைக் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications