உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் இதன் வளர்ச்சி அமோகமாக உள்ளது. பிளிப்கார்ட், ஈபே என அனைத்து இந்திய முன்னணி நிறுவங்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளது . அமேசான்-இன் இந்த மிகப் பெரிய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எளிதான அணுகுமுறை, எக்கச்சக்க பிராண்டுகள் மற்றும் சிறந்த முறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதே ஆகும்.
தற்போது இந்தியாவில் நிலவி வரும் வேலையில்லா நிலையை உணர்ந்து இளைஞர்கள் மாற்று வழிகளைத் தேட தொடங்கி விட்டனர். இதில் முதல் அங்கமாக ஆன்லைன் மூலம் தொழில் செய்வது.
இதில் அமேசான் நிறுவனம் தான் முதன்மை இடத்தைப் பிடிக்கிறது என்றாலும் மிகையாகாது. இந்தப் பதிவில் அமேசான் நிறுவனம் மூலம் உங்கள் பொருட்களை விற்பனை செய்யக் கணக்கை எப்படி உருவாக்குவது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
படி 1
முதல் படி செல்லர்சென்ட்ரல்.அமேசான்.இன் (sellercentral.amazon.in) சென்று புதிதாகப் பதிவு செய்ய register now என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
படி 2
அதில் புதிதாக அக்கவுன்ட் தொடங்க உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் கடவு சொல்-ஐ உள்ளிடவும்.
படி 3
நீங்கள் தொடங்க போகும் வர்த்தகத்திற்கு ஒரு பெயரை சுட்ட கேட்கும். இது தான் உங்கள் நிரந்த வர்த்தகப் பெயர் (legal business name).அதன் பின் பொறுப்பு துறுப்புகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று உங்கள் சம்மதத்தைக் கேட்கும். முழுமையாகப் படித்துவிட்டு ஒப்புதலை அளிக்கவும்.
படி 4
அடுத்தாக உங்கள் மொபைல் எண் சரிபார்ப்பு. உங்கள் எண்ணிற்கு ஒரு கடவு சொல் வரும் அதை உள்ளிட்ட வேண்டும்.
படி 5
இந்தப் படியில் உங்கள் வியாபார தளத்தின் பெயர், பொருட்களின் முக்கியத் துறை மற்றும் உங்கள் விலாச விபரங்களைப் பதிவிடுங்கள்.
படி 6
அதைத் தொடர்ந்து உங்களுக்கு அமேசான் கொரியர் சேவை வேண்டுமா இல்லை நீங்கள் வேறு கொரியர் மூலம் உங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க விருப்பமா என்று உறுதி கேட்கும்.
படி 7
இந்தக் கட்டத்தில் உங்கள் ஜிஎஸ்டி என் மற்றும் பான் எண்ணை பதிவு செய்யுங்கள். இதை உள்ளிட்டால் தான் உங்கள் பொருளை விற்க முடியும். சில பொருட்களை ஜிஎஸ்டி இல்லாமலும் விற்கலாம் உதாரணமாகப் புத்தகங்கள்.
படி 8
பிறகு நீங்கள் எந்தத் துறை சார்ந்த பொருளை எல்லாம் விற்க விரும்கிறீர்கள் என்று உள்ளிடவும் (அழகு, நகை, வீட்டு உபயோக பொருட்கள்...).
படி 9
அதைத் தொடர்ந்து அதை யார் தயாரிப்பது, உங்கள் ஆண்டு வருமானம், எதனைப் பொருட்கள் விற்க போகிறீர்கள் மற்றும் வேறு வர்த்தகத் தளத்தில் உங்கள் பொருளை விற்கிறீர்களா என்று கேட்கும்.
படி 10
இந்தக் கட்டத்தில் நீங்கள் தேர்வுசெய்த துறையில் எந்தெந்த பொருட்களை விற்கப்போகிறீர்கள் எனக் குறிப்பிட வேண்டும் (வீட்டு உபயோக பொருட்கள் என்றால் டிவி,பிரிட்ஜ்,மிக்ஸி) அதைத் தொடர்ந்து ஒவ்வொரு இடத்திற்கு ஏற்பவாறு கொரியர் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் அதற்குப் பிறகு வங்கி கணக்கு விபரங்களை உள்ளிடவும்.
படி 11
பிறகு product tax code-ஐ பதிவு செய்யுங்கள் ஏன் என்றால் பொருட்களுக்கு ஏற்றவாறு வரிகள் மாறும். இந்த வரி விதிப்பு முறைகளை முழுமையாகப் படித்த பின்பு இதை ஒப்புக்கொள்ளுங்கள்.
படி 12
இறுதியாக உங்கள் கையெழுத்தை டிஜிட்டல் முறைகள் பதிவேற்றம் செய்யவும். இது தான் கடைசிப் படி இதை முடித்த பிறகு நீங்கள் உங்கள் வியாபாரத்தைத் துவங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications