இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் இஸ்ரேலைச் சேர்ந்த துணை நிறுவனமான பனாயாவை விற்க முடிவு செய்துள்ளதாக 2017-2018 நிதி ஆண்டின் 4 ம் காலாண்டு முடிவு வெளியீட்டின் போது தெரிவித்துள்ளது.
பனாயா நிறுவனத்தினைக் கையகப்படுத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னால் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் ஷிக்கா மற்றும் முன்னால் தலைவர் ஆர் சேஷசாயி இருவரும் வெளியேறினர்.
விற்பனை
தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 2019-க்குள் பனாயா நிறுவனம் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நட்டம்
பனாயா நிறுவனத்தினால் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4 வது காலாண்டில் 118 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. பனாயா நிறுவனத்தின் மீது இன்ஃபோசிஸ் நிறுவனம் 589 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாராயண மூர்த்தி
பனாயா நிறுவனத்தினைக் கையகப்படுத்தியதில் ஆரம்பம் முதல் தனது அதிருப்தியை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தித் தெரிவித்து வந்தார். இதனால் இன்ஃபோசிஸ் நிறுவன போர்டு உரிப்பினர்கள் மற்றும் நாராயண மூர்த்தி இடையில் மிகப் பெரிய வாக்குவாதம் நடைபெற்றது. இதனிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ரஜீவ் பன்சால் மற்றும் பொது ஆலோசகர் டேவிட் கென்னடி உள்ளிட்டோரும் நிறுவனத்தினை விட்டு வெளியேறினர்.
பின்னர் நாராயண மூர்த்தியின் கோரிக்கைக்கு இணங்க பனாயா நிறுவனத்தினை வாங்கியது குறித்து விசாரிக்கக் குழு ஒன்றை இன்ஃபோசிஸ் போர்டு அமைத்தது. ஆனால் இந்த விசாரணை குறித்த தகவல்களை மட்டும் ஊட்டங்களுக்கு வெளியிட மறுப்புத் தெரிவித்தது.
பனாயா நிறுவனம்
பனாயா இஸ்ரேலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது கிளவுட் அடிப்படையாலான பயன்பாடுகள் டெலிவரி, ஆட்டோமேஷ்ன் டெஸ்டிங், நிர்வாகத் தீர்வுகள் போன்ற சேவையினை வழங்கி வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications